லண்டனில் 'மானாட மயிலாட'

போட்டியாளர்களுக்குள் ஒளிந்திருக்கும் நடனத் திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி 'மானாட மயிலாட.' 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 8-வது சீஸனின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இதன் பிரம்மாண்டமான இறுதிச்சுற்று, லண்டனில் உள்ள மிகப்பெரிய அரங்கமான வெம்ப்ளியில் நடந்து முடிந்திருக்கிறது. ஒரே நேரத்தில் 13 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் இந்த அரங்கு அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் தான் இந்த அரங்கு முழுமையாக நிறைந்ததாம்.

கோலிவுட்டின் முன்னணி நாயகர்கள் சிம்பு, ஜீவா, 'மிர்ச்சி' சிவா, சிவகார்த்திகேயன், நடிகைகள் குஷ்பு, த்ரிஷா, பூர்ணா, நமிதா, இனியா உள்பட பல பேர் லண்டனுக்குச் சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஜூலை 21-ம் தேதி மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நடன இயக்குநர் கலா  இந்த நிகழ்ச்சியை இயக்கி உள்ளார்.

8-வது சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து 9-வது சீஸனையும் விரைவில் தொடங்க உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!