வரலாற்றின் மறுபக்கம்!

உலக நாடுகளில் நடந்த சுவாரஸிமான சம்பவங்கள், சாதனையாளர்களின் வாழ்க்கைப் பதிவுகளை ஒளிபரப்பும் நிகழ்ச்சி 'வரலாற்றின் மறுபக்கம்.'

இதுவரை பார்த்திராத அரிதான நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்று, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.

தெளிவான ஒளிப்பதிவில், பிரமாதமான தகவல்களை ஆவணக் களஞ்சியமாக வரலாற்றின் மறுபக்கத்தில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

உலகத்தில் முடிந்துபோன பல விஷயங்கள், இனிவரும் காலங்களை புதுமையானதாக மாற்ற உதவி செய்கின்றன.

அந்த வகையில், வரலாற்றின் மறுபக்கமும் பார்வையாளர்களை புதிய சாதனைகள் படைக்கத் தூண்டும் என்கிறார்கள் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்.

தினமும் இரவு 9.30 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மறு ஒளிபரப்பை மறுநாள் காலை 10 மணிக்கு காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!