நல்ல நேரம்!

பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7.30 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'நல்ல நேரம்.'

இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடம் தங்களுடைய ராசிக்கான பலன்களை தொலைபேசி மூலம் நேயர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கஷ்டங்களைப் போக்குவதற்கான பரிகாரங்களையும் ஜோதிடர்கள் விளக்கிக் கூறுவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

ஜோதிடர்கள் காழியூர் நாராயணன், ஷெல்வி, பூஷண்ஜி பழனியப்பன் ஆகியோர் பரிகாரத் தலங்கள் பற்றியும் நேயர்களுக்கு எடுத்துக் கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை ஸ்ரீவிஹானிகா தொகுத்து வழங்குகிறார். அவர் கேட்கும் ராசிபலன் தொடர்பான கேள்விகள் நேயர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!