விஜய் டி.வி.யின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அன்று முழுவதும் விஜய் டி.வி.யில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

காலை 8 மணிக்கு, 'இந்தியா பொருளாதார மற்றும் வளர்ந்த நாடாக எது முக்கியம்? பணமா, ஆயுதமா, அரசியல் புரட்சியா' என்ற தலைப்பில் பட்டிமன்ற விவாதம் நடைபெறும்.

இயக்குநர் லிங்குசாமி கவிஞராக அவதாரம் எடுத்திருப்பதைத் தொடர்ந்து, 'லிங்குவின் ஹைக்கூ' என்ற சிறப்பு நிகழ்ச்சி காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் லிங்குசாமி தனது சொந்த ஊரில் இருந்து தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

காலை 10 மணிக்கு 'காதல் என் காதல்' நிகழ்ச்சியில், இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய காதல் மனைவி சைந்தவியுடன் நேயர்களைச் சந்திக்கிறார். திருமணமாகி சில நாட்களே ஆன இந்தத் தம்பதி, திருமணத்துக்குப் பின் முதல்முறையாக விஜய் டி.வி. வாயிலாக நேயர்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சி இது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படக்குழுவினர், மாலை 3 மணிக்கு 'கார்த்தியின் ஸ்பெஷல் பிரியாணி' என்ற நிகழ்ச்சி மூலம் நேயர்களைச் சந்திக்கிறார்கள்.

மாலை 4.30 மணிக்கு, 'ஆதலால் காதல் செய்வீர்' திரைப்படத்தின் பாடல்கள் பிரத்யேகக் கண்ணோட்டம். சுசீந்திரன் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் வெளிவந்துள்ள இந்தப் படத்தின் பாடல்களைக் கண்டு மகிழலாம்.

மாலை 5 மணிக்கு 'நடிகன்' நிகழ்ச்சியில், தற்போதைய கலக்கல் கதாநாயகன் விஜய் சேதுபதியைச் சந்தித்து உரையாடும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

சுதந்திர தின சிறப்புத் திரைப்படங்களாக காலை 11 மணிக்கு 'கடல்', மாலை 6 மணிக்கு 'வத்திக்குச்சி' ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!