சின்னத்திரையில் தயாரிப்பாளராகும் சமுத்திரக்கனி! | சின்னத்திரை தயாரிப்பாளர்

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (17/09/2013)

கடைசி தொடர்பு:13:16 (17/09/2013)

சின்னத்திரையில் தயாரிப்பாளராகும் சமுத்திரக்கனி!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் சமுத்திரக்கனி. ஆரம்பத்தில் கனி இயக்கிய படங்கள் சரியாகப் போகவில்லை.

சசிகுமாருடன் 'சுப்பிரமணியபுரம்'  படத்தில் நடித்த பிறகு சமுத்திரக்கனி வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

'நாடோடிகள்", 'போராளி' படங்களைத் தொடர்ந்து,  இப்போது 'நிமிர்ந்துநில்' படத்தை இயக்கிவருகிறார். இந்த தருணத்தில் சின்னத்திரையில் தயாரிப்பாளராகிறார் சமுத்திரக்கனி.

பட தயாரிப்பு, விநியோகம் செய்யும் வேந்தர் மூவீஸ் விரைவில் ஒரு  தொலைக்காட்சி சேனலைத் துவக்க உள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

வேந்தர் மூவிஸ் பெயரில் வெளிவரவுள்ள இந்த சேனலில், தொடர்களை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சமுத்திரக்கனியை நாடியுள்ளனர். சமுத்திரக்கனியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சின்னத்திரை தொலைக்காட்சித் தொடர்களில் பாலசந்தருடன் இயக்குனர் சமுத்திரக்கனி பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close