வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (27/11/2013)

கடைசி தொடர்பு:18:53 (27/11/2013)

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இன்னொரு ஹீரோ!

சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரைத் தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்.

அது இது எது நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா.பா.கா ஆனந்த் தான் அவர்.

இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

'வானவராயன் வல்லவராயன்' படத்தில் கிருஷ்ணா வானவராயனாக நடிக்கிறார்.

கிருஷ்ணாவின்  தம்பி வல்லவராயனாக மா.கா.பா. ஆனந்த் நடிக்கிறார்.

இதையடுத்து, 'பஞ்சுமிட்டாய்' என்ற படத்தில் ஹீரோவாக தனி ஆவர்தனம் செய்கிறார் மா.கா.பா. ஆனந்த்.

இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தில் வித்யூலேகா, பாண்டியராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இயக்குனர் பாண்டிராஜ் மா.கா.பாவை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தாராம். அதற்குள் பல வாய்ப்புகள் வந்தனவாம்.

பிடித்த கதையை செலக்ட் செய்ததில் , இப்போது இரண்டு படங்களில் நடிக்கிறார் மா.கா.பா.ஆனந்த்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்