சூப்பர் சிங்கர் 4 டைட்டில் வின்னர் திவாகர்! | திவாகர், சூப்பர் சிங்கர், super singer

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (03/02/2014)

கடைசி தொடர்பு:14:07 (03/02/2014)

சூப்பர் சிங்கர் 4 டைட்டில் வின்னர் திவாகர்!

விஜய்டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  திவாகர் அனைவரின் பாராட்டுகளோடு சூப்பர் சிங்கர் 4 பட்டத்தை வென்றார்.

விஜய் டிவியில் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 இறுதிப்போட்டி சனிக்கிழமை நள்ளிரவில் நிறைவுக்கு வந்தது.

ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு ஆரம்பித்த  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சோனியா, பார்வதி, சையத், சரத் சந்தோஷ், திவாகர் எனும்  ஐவரோடு  முடிந்தது.

ஐந்துபேரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியில் நன்றாகப் பாடினார்கள்.

முறையாக சங்கீதத்தை கற்றுக்கொள்ளாத போதும் தனது முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் திவாகர்  சூப்பர் சிங்கர் 4 இல் வெற்றி பெற்றார்.

சையத்  இரண்டாம் இடத்தையும், சரத் சந்தோஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close