ஹீரோவாக களம் இறங்கும் மிர்ச்சி ஷா! | மிர்ச்சி ஷா, ஊதா, mirchi sha, oodha

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (20/08/2014)

கடைசி தொடர்பு:12:38 (20/08/2014)

ஹீரோவாக களம் இறங்கும் மிர்ச்சி ஷா!

பண்பலை, தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சினிமாவில் ஹீரோவாக புரமோஷன் பெறுவது ஆரோக்கியத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா,  மிர்ச்சி செந்தில், மா.கா.பா. ஆனந்த், ப்ரஜின், முரளி என்று நீண்டுகொண்டே செல்லும் இந்தப் பட்டியலில் மிர்ச்சி ஷாவும் இணைந்திருக்கிறார்.

மணி நாகராஜ் இயக்கும் 'பென்சில்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நண்பராக நடிக்கும் மிர்ச்சி ஷா ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கிறார். படத்துக்கு 'ஊதா' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' படங்களை இயக்கிய சரவணனின் உதவியாளர் பழனி இப்படத்தை இயக்குகிறார்.

கிராமத்தை மையமாகக் கொண்ட இக்கதையின் களம் கொட்டாம்பட்டி. இதில் மிர்ச்சி ஷாவுக்கு ஜோடியாக கேரள நடிகை வைதேகி நடிக்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close