ச்சும்மா ... கிழி..கிழி - கின்னஸ் சாதனை படைத்தது மானாட மயிலாட!

 பத்து சீசன்கள், வித விதமான ஜோடிகள் என கலைஞர் டீவியின் மானாட மயிலாட டிவி ஷோக்களில் மிக பிரபலம். அதிலும் விதவிதமான செட்டுகள், உடைகள், கான்செப்டுகள் என பிரம்மாண்டமாகவே நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஏம்ஸ் ரூம் இல்யூஷன் என்ற முறையின் கீழ் தற்போது கின்னஸ் விருது படைத்துள்ளது. அதாவது ஒரே மேடையில் விதவிதமான செட்டுகள் அமைப்பது, ஒருவரே பல விதமான கெட்டப்களில் தோன்றி பார்வையாளர்களை கவர்வது என மானாட மயிலாட ஏம்ஸ் ரூம் இல்யூஷன் என்ற அடிப்படையில் கின்னஸ் ரெக்கார்டு அடுத்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட நேர ஏம்ஸ் ரூம் இல்யூஷனாக எபிசோட் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடத்திய போது கின்னஸ் பிரதிநிதிகள் பார்வையிட்டு கின்னஸ் ரெக்கார்டில் இணைந்துள்ளனர். அதற்கான சான்றிதழை கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட மானாட மயிலாட டீம் பெற்றுக்கொண்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!