என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? லட்சுமி ராமகிருஷ்ணன் புது ப்ளான் | Enna ma Ippadi panrengkale ma... Lakshmy Ramakrishnan New Show Plan

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (15/05/2015)

கடைசி தொடர்பு:15:38 (15/05/2015)

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? லட்சுமி ராமகிருஷ்ணன் புது ப்ளான்

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை, மற்றும் தொலைகாட்சி தொகுப்பாளராகவும் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனின்  ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி சின்னத்திரையில் மிகவும் பிரபலம். மேலும் இவர் சொல்லும் ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வரிகள் மக்கள் மத்தியில் துவங்கி சினிமா பிரபலங்கள் மத்தியில் கூட மிகப் பிரபலம். 

இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியின் மூலம் சமூக வலைதளங்களிலும் வைரலாகவே மாறியது. இந்நிலையில் இந்த ஒற்றை வரியைக் தலைப்பாகக் கொண்டு புது காமெடி நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். 

இதுகுறித்து, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற புதுமையான டீனேஜ் ஃபன் ஷோ திட்டமிட்டு வருகிறேன். எத்தனையோ மக்கள் விளம்பரத்திற்காக இந்த வார்த்தையை பயன்படுத்துகையில் ஏன் நான் செய்யக் கூடாது’ அதுவும் ஒரு நல்ல காரணத்திற்காக’ என ட்வீட் செய்துள்ளார். எனவே விரைவில் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close