டான்ஸில் பேய் ஆர்வம் எனக்கு - டான்ஸர் ‘அருக்காணி’!

ம்சம் சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கும் சிந்துகிருஷ்ணன். சன் டிவி ‘வம்சம்’ சீரியல் ‘அருக்காணி’ அலைஸ் சிந்துவுக்கு ‘ஹாய்’ சொன்னோம்!

‘‘நானும், என் கணவர் ஹரி கிருஷ்ணனும் டான்ஸர்ஸ். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே வட சென்னையில். பத்தாவதுதான் படிப்பு. டான்ஸில் பேய் ஆர்வம். டான்ஸ் கிளாஸில் சேர்ந்தேன். அந்த நேரத்துல என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலர், ‘சினிமாவுல டான்ஸ் ஆடினா உன்னோட செலவுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்!’னு சொன்னாங்க. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் குரூப் டான்ஸரா ஆடியிருக்கேன்.

காயத்ரி ரகுராம் மாஸ்டர், ஸ்ரீதரன் மாஸ்டர், சுஜாதா மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர்னு பலருக்கும் அசிஸ்டன்ட் கோரியோகிராஃபி பண்ணியிருக்கேன். ‘டான்ஸா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாடல் டான்ஸ்’ என்கிற நடனப் பள்ளியை ஒருவருஷமா நடத்திட்டு வர்றேன். ‘ஏழாம் அறிவு’ படத்துல என்னைப் பார்த்துட்டு, ‘வம்சம்’ சீரியல் தயாரிப்பாளர் வினயா கிருஷ்ணன், ‘இந்த அருக்காணி கேரக்டருக்கு இவங்க சரியா இருப்பாங்க’னு டிக் செய்து என்னைக் கூப்பிட்டாங்க.

அப்படியே நடிக்கவும் ஆரம்பிச்சாச்சு. இன்னைக்கு உலகத் தமிழர்கள் எல்லோருக்கும் இந்த ‘அருக்காணி’ அறிமுகமாயிட்டா. ‘வத்திக்குச்சி’ படத்துல அஞ்சலிக்கு தோழி கேரக்டர், ‘ஆலமரம்’ படத்துல போலீஸ் கேரக்டர்னு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைச்சது. ஒரு நல்ல காமெடி நடிகையா திரைத்துறையில் நிலைக்கணும் என்பதுதான் கனவு!’’

- வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!