இந்தியிலும் களைகட்டும் ஸ்டார் சமையல்!

கலர்ஸ் டிவியில் பல நிகழ்ச்சிகள் நம் ரீமோட்டிற்கே மனப்பாடம். அதில் ஒன்று கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி ‘ஃபாராஹ் கி தாவத்’. பாலிவுட் நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், ஃபாராஹ் கான் தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களில், அட என்ன பெரிதாக இருந்து விட போகிறது என எண்ணி பார்க்கவே, நம்மை நிகழ்ச்சியுடன் கட்டி போட்டார் ஃபாராஹ். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாலிவுட் நட்சத்திரம். முதல் ஷோவிலேயே அபிஷேக் பச்சன், அடுத்தடுத்து அலியா பட், ஷாருக்கான், என படையெடுத்தனர்.

ஃபராஹ் கானுடன் இணைந்து நட்சத்திரங்கள் வித விதமாக சமைக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு சமையல் நிகழ்ச்சியாக மட்டுமின்றி நட்சத்திரங்களை ஃபாராஹ் கான் தோழி , இயக்குநர், தயாரிப்பாளர் என சமையலின் இடைவெளியில் கேட்கும் கேள்விகள் செம ஜாலி மொமெண்ட் ரகம் தான்.

அதிலும் சமையலின் போது ஃபராஹ் எக்குத்தப்பான கேள்விகளை போட அதற்கு சமைக்கும் மும்முரத்தில் ஸ்டார்கள் உளர என இந்த நிகழ்ச்சிகளின் எபிசோடுகள் இணையங்களிலும் வைரலோ வைரல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8 மணிக்கு கலர்ஸ் டிவியில் களைகட்டிய இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதத்துடன் நிறவடைந்தது. அடுத்ததாக சல்மான் நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஃபாராஹ் கான் வர போகிறார் என சொல்லப்படுகிறது. அடப்போங்கப்பா சல்மான் சல்மான் தான்... 

-  டிவி பைத்தியம் - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!