ரஜினி படத்தோடு போட்டிபோடும் சிவகார்த்திகேயன் படம் | Sivakrthikeyan Race with Rajini

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (13/08/2015)

கடைசி தொடர்பு:15:11 (13/08/2015)

ரஜினி படத்தோடு போட்டிபோடும் சிவகார்த்திகேயன் படம்

  ஆகஸ்ட் 14 அன்று நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகிற திரைப்படங்களுக்கிடையேயான போட்டி ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம், ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களில் எந்த நடிகரின் படத்துக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்கிற பட்டிமன்றம் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக சன் தொலைக்காட்சியிலும் ஜெயா தொலைக்காட்சியிலும் புதியபடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. சன்னில் மாலை ஆறுமணிக்கு சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை படம் ஒளிபரப்பப்படவிருக்கிறதாம். அதேநேரம் ஜெயா தொலைக்காட்சியில் ரஜினி நடித்த லிங்கா படத்தை ஒளிபரப்பவிருக்கிறதாம்.

இவ்விரு படங்களில் எந்தப்படத்துக்கு அதிகவரவேற்பு இருக்கிறது என்பது ஒளிபரப்பப்பட்ட சில நாட்களில் தெரியவரும். அந்த முடிவை வைத்துத்தான் அந்தக் கதாநாயகர்களின் அடுத்த படங்களை தொலைக்காட்சிகள் வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.           

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close