பெண்களை இழிவு படுத்துகிறாரா பிரகாஷ் ராஜ்!

சமீபத்தில் தொலைக்காட்சி முதல் ஆன்லைன் வரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கிறது. டீஸராக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் எந்த பிராண்டிற்காக என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முழுமையான விளம்பரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்விளம்பரத்தில் கல்யாண வயதில் உள்ள பெண்களை அப்பெண்ணின் பெற்றோர்கள் டென்ஷன் என குறிப்பிடுவதும் அதற்கு பிரகாஷ் ராஜ் 'கல்யாண வயசுல பொண்ணுங்க இருந்தாலே டென்ஷன் தானே' என கூறுவதைப் போலவும் அமைந்துள்ளது.

இந்த விளம்பரம் முகநூல் மற்றும் ட்விட்டர் ல் ஏனைய மக்களால் விமர்சிக்க பட்ட வண்ணம் உள்ளது. கல்யாண வயசுல பெண்கள் இருந்தால் உண்மையில் பெற்றோர்களுக்கு டென்ஷன் தானே என ஆதரிப்பது போல் ஒரு சாரரும், பெண்களை டென்ஷன் என எப்படி குறிப்பிட முடியும் என மற்றொரு தரப்பும் காரசார விவாதத்தில் இடுபட்டுள்ளனர். 

 பெண்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக பல வகையில் பாடுபட்டு தங்களை தாங்களே வழிநடத்தி வரும் நிலையில் இப்படி ஒரு விளம்பரம் தேவையா. பெண் பிள்ளைகள் என்றாலே வரதட்சணை சேர்க்க வேண்டும், திருமணம் ஆகும் வரை அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என இந்த நூற்றாண்டிலும் பிரச்னைகள் இருப்பினும் அதை சரி செய்ய பல அமைப்புகள் போராடி வருகின்றன. இந்தக் காலத்தில் பெண்களை டென்ஷன் என சொல்லும் விளம்பரம் பெண் இனத்தை இழிவு படுத்துவதாக சமூக வாதிகள் பலரும் சர்ச்சை கிளப்பி வருகிறார்கள்.

மேலும் பிரகாஷ் ராஜுக்கும் மேக்னா, பூஜா என இரு மகள்கள் இருக்கும் நிலையில் அவர் தன் மகள்களை டென்ஷனாகக் கருதுகிறாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன. பார்க்கலாம் இது என்ன விளம்பரம் என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!