டிடி யாருக்கு ராக்கி கட்டப்போகிறார்? | DD to tie rakhi for Suriya, Vijay

வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (29/08/2015)

கடைசி தொடர்பு:13:22 (29/08/2015)

டிடி யாருக்கு ராக்கி கட்டப்போகிறார்?

 விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு தான் யாருக்கு ராக்கி கட்ட ஆசைப் படுகிறார் எனக் கூறியுள்ளார். வெங்கட் பிரபு, பஞ்சு சுப்பு, மற்றும் சமுத்திரகனிக்கு சென்ற வருடம் ராக்கி கட்டியுள்ளாராம். 

இந்நிலையில் இந்த வருடம் ரக்‌ஷா பந்தனையடுத்து யாருக்கு ராக்கி கட்ட விருப்பபடுகிறார் என கேட்டபோது நடிகர் சூர்யா மற்றும் விஜய்க்கு ராக்கி காட்ட ஆசைப்படுவதாகாக் கூறியுள்ளார்.  மேலும் இவர்கள் இருவரையும் இப்போது வரை திரையில் சார் எனக் கூப்பிட்டு வருகிறாராம். 

சூர்யா அண்ணனுக்கு உரிய அக்கறை அதிகம் கொண்டவர், அண்ணனாக சரியாக பொருந்துவார் எனவும் மேலும் விஜய் மீது அண்ணனுக்குரிய மரியாதை உள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்ணா என தமிழ் நாடே கூப்பிடும் போது டிடிக்கு இருப்பது ஆச்சர்யம் இல்லை என்றே கூறவேண்டும்... 

- டிவி பைத்தியம் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close