என்ன நடக்கிறது டிவி சேனல்களில்...சண்டே கூடவா? | What's Going In TV Channels?

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (31/08/2015)

கடைசி தொடர்பு:16:08 (31/08/2015)

என்ன நடக்கிறது டிவி சேனல்களில்...சண்டே கூடவா?

 ஞாயிறுகளிலும் தொடரும் பல்க் சீரியல்கள் ஒரு பக்கம். இன்னொருபக்கம்,  முன்னணி டிவி சேனல்களே இப்போதெல்லம் ஞாயிறுகளில் ப்ரைம் டைம் என சொல்லப்படும், காலை 10 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை என நேரங்களை வீணடிக்கத் துவங்கி விட்டனர். 

வாரம் முழுக்க ஒளிபரப்பான சீரியல்களின் தொகுப்பை அப்படியே சண்டேக்களில் இடைவிடாது சில சேனல்கள் ஒளிபரப்புகின்றன. முன்னணி சேனல்கள் வரிசையில் உள்ள ஒரு சேனல் போட்ட நிகழ்ச்சிகளை, மறு ஒளிபரப்பு என்ற பெயரில் தொடர்ந்து மூன்று வாரங்களாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.  

இன்னொரு சேனலோ புதுப்பாடல்களையும், சீன்களையும் போட்டு ஏதோ இவர்களின் மற்ற சேனல்களில் இதெல்லாம் இல்லாத ஒன்றைப் போல் ஒளிபரப்புகிறார்கள். இதில் ஒரே மாதிரி பாணியில் காமெடி ஷோக்கள் , அல்லது நடன நிகழ்ச்சிகள் இல்லையெனில் இதைத் தாண்டி போட்டிகள். படங்களும் அப்படித்தான்.

புதுசா எதாவது செய்ங்க என்று கத்தவேண்டும் போல இருக்கிறது. இப்போதெல்லாம் கார்டூன் சேனல்கள் இவர்களை விட நல்ல நிகழ்ச்சிகள் கொடுக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. நல்ல நல்ல சர்ச்சை, அல்லது யூத் கலாட்டா ஷோ என ஹாலிவுட் சேனல்கள் எங்கேயோ போய்க் கொண்டிருக்க இங்கே ரிமோட்டைத் தொடவே பயமாக வருகிறது. 

ஞாயிறுகளில் கூட மியூசிக் சேனல்களோ, அல்லது காமெடி சேனல்களோ, ஏன் கார்டூன் சேனல்களோ ஆக்கிரமிக்கும் அளவிற்கு முன்னணி டாப் சேனல்கள் ஆக்கிரமிக்கவில்லை என்பதே உண்மை. இதில் சிறப்பு என்னவென்றால் புகழ் பெற்ற டிவிக்களுக்கு ஞாயிறு மார்கெட்டிங் எவ்வளவு முக்கியம் ஆனால் அதையே இவர்கள் கண்டுகொள்வதில்லையே என்ற வருத்தமே உண்டாகிறது. 

- டிவி பைத்தியம் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close