கணவரைப் பிரிந்தார் தொகுப்பாளினி ரம்யா!

 விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் மற்றும் பல சினிமா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி ரம்யா தனது கணவரை பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ” எனது திருமண பந்தம் முறிந்தது. இது இருவரும் இணைந்தே எடுத்த முடிவு. இந்த அறிவிப்பின் மூலம் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். எனது ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். திருமண பந்த முறிவு எனது தனிப்பட்ட பிரச்னை.

மேலும், அது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எனவே, எனது தனிப்பட்ட சுதந்திரத்துள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்னையை இத்தோடு விட்டுவிடுங்கள். இப்போது எனது கவனம் எல்லாம் வேலையின் மீதே இருக்கிறது. என் பணி நிமித்தமாக உதவும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

'ஓகே கண்மணி' படத்தில் நடித்துள்ள ரம்யா, மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும், இது கணவர் அப்ரஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும்இருவரும் ஏன் பிரிகின்றனர் என்பதற்கான காரணத்தை வெளியிட விரும்பவில்லை. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!