சல்மான்கானுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் பச்சன்? | Aishwarya Rai Bachchan not to promote 'Jazbaa' on Salman Khan's Show?

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (16/09/2015)

கடைசி தொடர்பு:15:26 (16/09/2015)

சல்மான்கானுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் பச்சன்?

சல்மான் கான் நடத்தும் டாப் நிகழ்ச்சியான பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் மறுப்புத் தெரிவித்துள்ளது பாலிவுட் சினிமா தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான்கானும் , ஐஸ்வர்யா ராயும் முன்னாள் காதலர்கள் என்பது நாமறிந்ததே. இருவரும் இணைந்து நான்கு படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. அந்த வேளையில் தான் சல்மான் கானுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் மலர்ந்தது. 

சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தனர். பின்னர் சல்மான்கான் காத்ரீனா கைஃபுடன், ஐஸ்வர்யா ராய் விவேக் ஓபராயுடனும் கிசுகிசுவில் சிக்கினர். இந்தக் காதலும் இருவருக்கும் கைகூடவில்லை. ஐஸ்வர்யா விவேக் ஓபராய், சல்மான்கான் காத்ரீனா இந்த காதல்களுலம் முறிந்தன. அதன்விளைவாக சல்மான் கான் இனி கல்யாணமே வேண்டாம் என முடிவு எடுத்து இப்போதுவரை வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. 

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் புரிந்து அவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது, ‘ஜாஸ்பா’ என்னும் படத்தின் மூலம் 5 வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராயுடன் இர்ஃபான் கான் நடித்துள்ளார். இந்தப்படம் அக்டோபர் 9ம் தேதி வெளியாகிறது. 

ஒரு புதுப் படம் வெளியாகிறது எனில் சல்மான்கானின் ‘பிக் பாஸ் 9’ நிகழ்ச்சியில் புரமோஷன் கருதி அந்த படத்திற்கு சம்மந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர் கலந்துகொண்டு சல்மானுடன் நடனம் ஆடுவது, படம் குறித்து பேசுவது என நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அரங்கேறும். அந்த நிகழ்ச்சியில் தான்  தனது ’ஜாஸ்பா’ படத்தின் புரமோஷன் கருதி ஐஸ்வர்யா ராயும், இர்ஃபான் கானும் பங்கேற்க இருந்தனர். இப்போது ஐஸ்வர்யா ராய் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்களுக்கும், பாலிவுட்டின் பல தரப்பிற்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அவங்களுக்கு மட்டுமா டிவி ரீமோட்டுடன் ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் ரெண்டு பேரையும் ஒரே ஸ்க்ரீன்ல திரும்பப் பார்க்கலாம் என நினைத்த என்னைப் போன்ற டிவி பைத்தியங்களுக்கும் தான். 

 - டிவி பைத்தியம் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close