என் திருமணமுறிவுக்கும் மணிரத்னம் படத்துக்கும் சம்பந்தமில்லை, தொகுப்பாளினி ரம்யா தகவல்!

தொகுப்பாளினி ரம்யா தனது திருமண முறிவு குறித்து வரும் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். நான் தற்சமயம் மலேசியா ஜோடி நம்பர் ஒன் ஃபைனலில் இருக்கிறேன். இப்பவும் எனது திருமண முறிவுக்கு சரியான காரணங்களை வெளி உலகுக்கு அறிவிக்கவில்லை. நாங்கள் பிரிவதை மட்டுமே கூறியிருந்தேன்.

எனினும் பலரும் இதற்குப் பல காரணங்களை உருவாக்கி செய்திகள் பரப்பி வருகிறார்கள். முக்கியமாக நான் மணிரத்னம் சார் இயக்கத்தில் நடித்த ஓ காதல் கண்மணி தான் இதற்கு காரணம் எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளனர். நான் பல வருடங்களாக மீடியாவில் இருக்கிறேன். பல சினிமா வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

என் குடும்பத்தாருக்கு நான் சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. மேலும் ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு வந்த சினிமா வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை. எனக்கும் அவருக்கும் திருமணமான 10 நாட்களிலேயே கருத்துவேறுபாடுகள் உருவாகிவிட்டன. அப்போதே எங்களுக்கு இந்த திருமணம் பந்தம் சரியான பாதையில் போகவில்லை என்பது தெரிந்துவிட்டது.

மீண்டும் சொல்கிறேன். இது இரு குடும்பத்தார் சம்மந்தப்பட்ட விஷயம். இதில் தவறான வதந்திகளை பரப்பி இரு வீட்டாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம். மேலும் நான் ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டதே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான்.

19 வயதில் நான் மீடியாவுக்குள் வந்துவிட்டேன். இப்போது 28 வயது இந்த கால இடைவெளியில் ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்தன. அதையெல்லாம் நிராகரித்து விட்டு இப்போது நடிக்கிறேன் எனவும் அதனால் தான் எங்களுக்குள் பிரிவு எனவும் வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலுமாகப் பொய். சினிமாவில் நான் நினைத்தால் இப்போதும் நடிக்கலாம். ஓ காதல்கண்மணி நட்பின் அடிப்படையில் மட்டுமே நடித்தேன் இதற்கும் எங்கள் பிரிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!