எட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’! | Game of Thrones Finally Conquers the Emmys with Record-Breaking Wins

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (21/09/2015)

கடைசி தொடர்பு:16:23 (21/09/2015)

எட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’!

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி விருதான எம்மி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது, ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ்விருதில் சிறந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடை பெற்ற இவ்விழாவில், பீட்டர் டின்க்லகெ மற்றும் ஜான் ஹாம் இருவரும் நீண்ட காத்திருப்புக்கு பின் எம்மி விருதினை பெற்றுள்ளனர்.

மேட் மென் என்னும் நாடக தொடருக்காக ஜான் ஹாம் விருதினை பெற்றார். "கேம் ஆப் த்ரோன்ஸ்" தனிப்பெரும்பான்மை பெற்றத் தொடருக்கான விருதினை தட்டிச்சென்றது . இந்த டிவித் தொடர் உலகம் முழுக்க 2 கோடிக்கும் அதிகமான  ரசிகர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வயோலா டேவிஸ் "ஹவ்  டு கெட் அவே வித் எ மர்டர்" என்ற தொடருக்காக, சிறந்த நடிகை, விருதை பெற்றார், மேலும் கருப்பின பெண்களில் வயோலா இவ்விருதினை முதல் முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருதினை வீப் நிகழ்ச்சியும், சிறந்த நகைச்சுவை நாயகிக்கான விருதினை ஜூலியா லூயிஸ் ட்ரேய்புஸும் பெற்றனர். இத்தொடரினை பிரபல காமெடியன் மற்றும் நடிகர் அடம் சாம்பெர்க் தொகுத்து வழங்கினர்.இந்த கேம் ஆஃப் த்ரான்ஸ் 24 பரிந்துரைப்பட்டியல்களில் இடம்பிடித்து 8 விருதுகளுடன் அதிக எம்மி விருதுகள் பெற்ற லிஸ்டில் புது சாதனை படைத்துள்ளது.

-பிரியாவாசு-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்