மம்முட்டிக்கு வந்த திடீர் சிக்கல்!

மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல நிறுவனத்தின் சோப் விளம்பரம் கடந்த ஒருவருட காலமாக மலையாள டிவி சேனல்களில் மம்மூட்டி நடிப்பில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதனை பயன்படுத்திய கே.சாது என்னும் சிலை வடிவமைப்பாளர், மம்மூட்டி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், கடந்த ஒரு வருடமாக மம்மூட்டி நடித்துவரும் சோப்பு விளம்பரத்தைப் பார்த்த நான் குறிப்பிட்ட சோப்பை பயன்படுத்தத் துவங்கினேன். ஆனால் விளம்பரத்தில் குறிப்பிட்ட எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

என்னை மிகவும் ஏமாற்றிவிட்டது அந்த சோப் என்று சொல்லியிருக்கிறார். மேலும்  தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு ஈடு செய்ய வேண்டும் என 50,000 ரூபாய் நஷ்ட ஈடும் கேட்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது.  வழக்கு விசாரணை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கண்டிப்பாக டிவி விளம்பரங்களுக்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- டிவி பைத்தியம் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!