மீண்டும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிறார் அமிதாப் பச்சன்! (அமிதாப் நடனம் ஆடும் வீடியோ இணைப்பு)

என்னதான் சல்மான் கான் ஆவோ , ஆவோ , சொன்னாலும், கலா அக்கா கிழி கிழின்னாலும் நம்ம அமிதாப் பச்சனோட கம்பீரமான டிவி நிகழ்ச்சிய மட்டும் அடிச்சிக்கவே முடியாது. ஸ்டார் ப்ளஸ் டிவி  2000ஆம் ஆண்டு ஒளிபரப்பிய 'கோன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சியை யாராலயும் மறக்கவே முடியாது. அந்த நிகழ்ச்சியோட வெற்றி இந்தி தாண்டி, மலையாளம், தமிழ், தெலுங்குன்னு டப்பாகி படு ஃபேமஸ் ஆச்சு.

ஏன் இந்த நிகழ்ச்சியையே பல சேனல்கள்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ண வரலாறுகளும் இருக்கின்றன.  இப்போது மீண்டும் அதே சேனல்ல நடிகர் அமிதாப் பச்சன் புதுசா ஆரம்பிக்கப் போற  நிகழ்ச்சியத் தொகுத்து வழங்கப் போறாரு. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் (அக்டோபர்) ஒளிபரப்பாகிறது. இதற்கான விளம்பரம் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த விளம்பரத்தில, அமிதாப்பச்சன் இளமை துள்ளலுடன் டான்ஸ் ஆட சும்மா அள்ளுது. ஆமா இவருக்கு வயசே ஆகாதா?

- டிவிபைத்தியம்- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!