வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (29/09/2015)

கடைசி தொடர்பு:13:17 (29/09/2015)

குழப்பத்தை ஏற்படுத்திய டிவி நிகழ்ச்சி, கிண்டலடித்த நடிகை!

 அமெரிக்காவின் பிரபல நியூஸ் சேனலான ABC தனது பிரபல இரவு நிகழ்ச்சியான நைட்லைட் நிகழ்ச்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். பிரியங்கா சோப்ரா நடித்துவரும் ஹாலிவுட் அமெரிக்க சீரியலான குவண்டிகோவில் நடித்து வருகிறார். 

நம்மூரிலும் இந்த நிகழ்ச்சி தற்போது பிரியங்கா சோப்ராவால் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி குறித்து இன்னும் இந்தியாவில் பிரியங்கா சோப்ராவால் பேட்டிக் கொடுக்க இயலவில்லை. காரணம் அவர் அங்கிருப்பதே. இந்நிலையில் இந்தியா நடிகை மேலும் உலக அழகி என்ற பட்டமும் இணைந்துக்கொள்ள அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி பிரியங்காவுடனான நேரலை பேட்டி ஒன்றை ஒளிபரப்பினர். 

அதில் லைவ் நிகழ்ச்சிக்கு இடையில் சின்னச்சின்ன க்ளிப்பிங்குகள் மற்றும் சீரியல் காட்சிகள் போடப்பட்டன. இடையில் உலக அழகி பட்டம் வாங்கிய ஃப்ளாஷ்பேக் காட்சியும் அரங்கேறியது அங்கேதான் குழப்பம் ஆரம்பம். கொஞ்ச நேரத்தில் அச்சச்சோ ஏபிசி என பல ட்வீட்டுகள் பரவ ஆரம்பித்துவிட்டன. 

காரணம் பிரியங்கா சோப்ரா உலக அழகியாக முடி சூடினார் என டிவி வாசிகள் ஓட்டிக் காட்டியது பிரியங்காவுக்கு முந்தைய வருடம் உலக அழகிப் பட்டம் வென்ற யுக்தா முகியின் வீடியோக் காட்சி. அவ்வளவுதான் நேயர்கள் முதல் பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் வரை டிவி சேனலுக்கு செம பரைடு எடுத்தார்கள். இதனை அடுத்த நாளே சேனல் சார்ந்த ட்விட்டரில் அவர்களே கிண்டலடித்துப் போட்டுக்கொண்டாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை. 

பிரியங்கா சோப்ராவும் LOL என்ற ஒற்றை வார்த்தையில் இந்தத் தவறைக் கிண்டலடித்துவிட்டார். இதில் பலரும் ’சம் ஒன் காட் ஃபைர்ட்’, அதாவது யாருக்கோ வேலை போய் விட்டது எனவும் கிண்டல்கள் பறக்கத்துவங்கிவிட்டன. எங்களுக்கும் தான் சிப்பு சிப்பா வருது பாஸ்... 

- டிவிபைத்தியம்- 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்