இளம் நடிகருடன் காதலில் சிக்கிய டிவி தொகுப்பாளினி!

தெலுங்கு தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி ராஷ்மி இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதுதான் தெலுங்கு திரையுலகின் டாப் செய்தி. நம்மூரின் டிடி, ரம்யா, பெப்சி உமா பாணியில் ஆந்திரா, தெலுங்கு உலகில் ராஷ்மி மிகவும் பிரபலம்.

அபரிமிதமான கவர்ச்சி உடைகள், தைரியமாக பேசும் ஆற்றல், குறும்புப் பார்வை என ராஷ்மிக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் சில காலமாக டிவி காமெடி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். பின்னர் அந்தப் பிரச்னை அப்படியேப் மீண்டும் ஒரு நடிகருடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். ராஷ்மி ஹீரோயினாக நடித்த குண்டூர் டாக்கீஸ் என்னும் படத்தின் நாயகனுடன் அடிக்கடி பொது இடங்களில் தென்படுகிறார்.

கன்னட சினிமா உலகிலும் வாய்ப்புகள் தேடி வரும் ராஷ்மி தன்னை ஒரு வேளை ட்ரெண்டிலேயே வைத்துக்கொள்ள எண்ணி இவ்வாறு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்படுவதை வழக்கமாக வைத்துள்ளாரோ என தெலுங்கின் முன்னணி நடிகைகளும் தற்போது ராஷ்மியை போட்டியாகக் கருதத்துவங்கியுள்ளனர். ஓ இதான் நம்பர் ஒன் நடிகைக்கான தகுதியா? 

-டிவிபைத்தியம் -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!