பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி, மீண்டும் காபி வித் டிடி!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று காபி வித் டிடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் அனு ஹாசன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அனுஹாசன் நிகழ்ச்சியைக் காட்டிலும் டி.ஆர்.பி அளவில் மிகவும் பிரபலமானது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பிரபலங்களே இல்லை எனலாம். இடையில் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்யாமல் ஒதுங்க அதற்கு சரியான காரணங்கள் இன்றிப் போனது. தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சி ஆயுத பூஜை சிறப்பாக நடந்துள்ளது.

இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதையொட்டி டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆயுத பூஜை சிறப்பு காபி வித் டிடி-யில் 10 எண்றதுக்குள்ள படத்தின் நாயகன் நாயகி விக்ரம், சமந்தா கலந்துகொண்டுள்ளனர். ஒருவழியா முற்றுப்புள்ளி வெச்சிட்டாங்களா பஞ்சாயத்துக்கு.

-டிவிபைத்தியம்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!