எம்டிவி நிகழ்ச்சி போல நம்மூர்லயும் வேணும் பாஸ்?

இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருப்பது நாமறிந்ததே. இளமை எவ்வளவு இன்பங்களைக் கொண்டு வருமோ அதே அளவுக்கு பிரச்னைகளையும் கொண்டு வருவது இயல்பு, அதை மையமாக வைத்தே எம்.டிவியில் புதிய நிகழ்ச்சியான பிக் எஃப் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 பெரியவர்களுக்கான நிகழ்ச்சியே என்றாலும் கார்பரேட் கலாச்சாரம், ஐடி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், புதிதாக வேலைக்குச் செல்லும் இளசுகள் சந்திக்கும் பிரச்னைகள் என ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு பிரச்னை என ஒரு சின்ன குறும்படமாகவே நீள்கிறது நிகழ்ச்சிகள் யாவும்.

காதல், காமம், இனக்கவர்ச்சி , அலுவலக இடையூறுகள், டீம் பிரச்னைகள் ஆகிய அனைத்தையும் சொல்லி அதற்குத் தீர்வும் வைக்கிறது இந்த Big F நிகழ்ச்சி. முன்னதாக எம்.டி.வியின் வெப்ட் என்னும் நிகழ்ச்சி மூலம் இணையதள பிரச்னைகள், குறும்படங்களாக ஒளிபரப்பாகி விழிப்புணர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி  ஒரு நிகழ்ச்சி நம்மூரிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

- டிவிபைத்தியம் - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!