இளையராஜா, அனிருத் இசைகளில் பாடிய பாடகிக்குக் கிடைத்த பெருமை

ஃ ப்ரோசன் 2013 இல் வெளிவந்த அனிமேசன் திரைப்படம். வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளி வந்த இப்படம் ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உட்பட எண்ணற்ற விருதுகளை அள்ளியது, டிஸ்னி அனிமேஷன் தயாரிப்பிலேயே சிறந்த திரைப்படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

தற்போது டிஸ்னி சேனலில் ஹிந்தியில் ஒளிபரப்பாக இருக்கும் இப்படத்தில் பாடகி சுனிதி சௌகான் குரல் கொடுத்துள்ளார் என்பதே செய்தி. படத்தின் புகழ் பெற்ற எலிசா கதாபாத்திரத்திற்கு அவர் குரல் கொடுத்துள்ளார், மேலும் இப்படத்தின் பாடல் லெட் இட் கோ என்ற பாடலையும் அவர் ஹிந்தியில் பாடியுள்ளார். வருகிற டிசம்பர் 12 அன்று டிஸ்னி சேனலில் இப்படம் ஒளிபரப்பப்படுகிறது.

சுனிதி சௌகான் தூள், கில்லி, இளையராஜா இசையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் முதல் முறை, அனிருத் இசையில் டார்லிங் டம்பக்கு, செல்பி புள்ள போன்ற பாடல்களைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!