உலக அழகி டூ உலக நாயகி- அசத்தும் பிரியங்கா சோப்ரா!!

பிரியங்கா சோப்ரா உலக நாயகி ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவின் டிவி சீரியலான குவாண்டிகோ சீரியல், மேரி கோம் படம் ஆகியனவற்றால் ஆசியாவின் செக்ஸி பெண்ணாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார் இந்த முன்னாள் உலக அழகி.

அமெரிக்க எஃப்.பிஐ குழுவில் பணியாற்றும் பெண்ணாக பிரியங்கா நடித்து வரும் இந்த சீரியலின் முதல் சீசன் 22 எபிசோட்களுடன் முடிந்துள்ளது. முன்னாள் உலக அழகி, இந்திய நடிகை, ஆசிய செக்ஸியஸ்ட் பெண் , என பல முகங்களுடன் பிரியங்காவின் சீரியல் தற்போது இன்னும் 100க்கும் அதிகமான நாடுகளில் 44 மொழிகளில் டப்பாகி உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.

இரண்டாவது சீசனில் பிரியங்கா சோப்ரா எஃப்.பி.ஐக்கு மீண்டும் திரும்பியதிலிருந்து கதை ஆரம்பிக்குமாம். ஸ்பேனிஷ், இத்தாலியன், ஜெர்மன், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பாக இருக்கிறது. அடுத்த சீசன் அதீத திருப்பங்களும் , த்ரில்லர்களும் நிறைந்து காணப்படுமாம்.பாஸ் தமிழுக்கு வருமா?

- டிவிபைத்தியம் -

ஹிட் ஹாட் பிரியங்கா சோப்ரா ஆல்பத்திற்கு க்ளிக்: http://bit.ly/1PHWHGO

Do you like the story?

Please Appreciate the Author by clapping!