எக்ஸைடட் டிடி... காரணம் என்ன?

டிடி என்கிற திவ்யதர்ஷினியின் டிவி நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் ரசிகர் வட்டாரம் உள்ளது. டிடி தொகுத்தளித்த ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி என இவையாவும் விஜய் டிவியின் டி.ஆர்.பியை எகிற வைத்த நிகழ்ச்சிகள்.

அதிலும் காபி வித் டிடி நிகழ்ச்சி மூன்று சீசன்களைக் கடந்து ஹிட்டடித்தது. இந்நிலையில் திருமணம் ஆனபின் தொடர்ச்சியாக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காத டிடி, பண்டிகை நாட்கள், சிறப்பு நாட்களில் காபி வித் டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார், ஆயுத பூஜை தினத்தில் பத்து எண்றதுக்குள்ள குழுவுடன், மற்றும் தீபாவளி அன்று கமல்ஹாசனுடன் ஆகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இப்போது பொங்கல் சிறப்பாக ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் காபி வித் டிடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இதனால் மிகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் விஜய் டிவிக்கு எப்படி வெறும் நன்றிகளை மட்டும் சொல்வது.  2016ன் எனது முதல் காபி வித் டிடி நிகழ்ச்சியே இளையராஜா சாரின் ஆசீர்வாதங்களோடு ஆரம்பம் என்று அவர் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். காபி வித் டிடி நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பதால் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்களும் வெயிட்டிங்!! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!