சீதையின் ராமன் சீரியலுக்கு வரவேற்பு எப்படி?

‘சீரியலா... ஓ மை காட்! அலர்ஜி... என சிணுங்கிய இளசுகளைக் கூட கண்கொட்டாமல் அதுவும் இதிகாசத் தொடர் மகாபாரதம் பார்க்க வைத்த பெருமை விஜய் டி.வி-க்கே!

இப்போது அவர்கள், மற்றொரு மாபெரும் இதிகாசமான ராமாயணத்துடன் களத்தில் இறங்கியுள்ளனர். ‘சீதையின் ராமன்’... திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு, பார்க்க முடியாதவர்களுக்கு இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

ஜனவரி 4ம் தேதி ஆரம்பிச்ச இந்த நாடகம் அதுக்குள்ள செம டாப். ஏழு மணிக்கு சமையலா நோ வே இப்படி வீட்டுத் தலைவிகள் அடம்பித்தது பழசு. ஹேய் நான் 7.30 மணிக்கு அப்பறம் சாட் பண்ணவா இப்படி இளைஞர்கள் கூட ஃபேஸ்புக், வாட்ஸப்பை க்ளோஸ் செய்துவிட்டு அமர்ந்து விடுகிறார்கள் சீதாவின் ராமனைப் பார்க்க.

தற்சமயம் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ‘சியா கி ராம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரை ‘ட்ரையாங்கிள் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் நிகில் சின்ஹா தயாரிக்க, ஆனந்த் நீலகண்டன், சுப்ரத் சின்ஹா, பாவ்னா வியாஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

ராமராக ஆஷிஷ் ஷர்மாவும், சீதையாக மதிராக்‌ஷி முந்திலும் மனதைக் கொள்ளை கொள்ள இருக்கிறார்கள். இந்தத் தொடரோட ஸ்பெஷல் இனிமே தான் சீதா , ராமன் எண்ட்ரியே. இப்போதைக்கு சீதா, ராமன் சின்னக் குழந்தைகளா விளையாடிட்டு இருக்கற இந்த சீரியல் தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, பெங்காலி, போஜ்பூரி இப்படி ஐந்து மொழி சேனல்களிலும் சக்கைப் போடு போடுது.. ஹே ராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!