விஜய் டிவியின் அடுத்த பிரம்மாண்ட ஷோ: கிங்ஸ் ஆஃப் டான்ஸ்!

விஜய் டிவியில் புது நிகழ்ச்சி.... ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் (v) கேர்ள்ஸ், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிகளையடுத்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி. கல்யாண் மாஸ்டர், பிரியாமணி நீதிபதிகளாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் ரூல் , கண்டிப்பாக போட்டியாளர் மீடியா சம்மந்தப்பட்ட ஆட்களாக இருக்கக் கூடாது.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஸ்டைலில் பொதுமக்களில் திறமையானவர்களைக் கண்டறியும் தேடல் தான் இந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தனி நடனத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் இதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆடும் வாய்ப்புகள் தரப்பட உள்ளன. ஒரே ஒரு கட்டாயம் நடனம் தெரிந்திருக்க வேண்டும். 

கல்லூரி , ஆஃபீஸ், ஏரியா நண்பர்கள் என வயது வரம்பின்றி நடனக் குழுக்களாகவோ, தனியாகவோ என கலந்துகொள்ளலாம். நடனக் குழுவில் இத்தனை நபர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் 35 பேர் கொண்ட குழுவாகக் கூட இறங்கி கலக்குகிறார்கள்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள் கல்யாணம் டு காதல் சீரியல் நாயகி பிரியா பவானி ஷங்கர், மற்றும் சரவணன் மீனாட்சி வேட்டையனாக வரும் கவின். விஜய் டிவிக்கு இந்த நிகழ்ச்சி மூலம் இரண்டு விஜேக்கள் அறிமுகம் எனக் கூறலாம். பிரியா, கவினுக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம் என்ற நிலையில் ஆரம்பித்த முதல் நாளே பலரையும் பார்க்க வைத்து விட்டது விஜய் டிவி. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு விஜய் டிவி இனி அதிரும். இடையிடையே அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சாப் போச்சு குழுக்களின் காமெடிகளும் அரங்கேறுகின்றன. பார்க்கலாம் ஜாலியாக துவங்கியுள்ள இந்நிகழ்ச்சி இனிதான் கமெண்டுகள், எலிமிநேஷன்கள் என சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது. வாரா வாரம் சிறப்பு விருந்தினர்களும் நிகழ்ச்சியை அலங்கரிக்க உள்ளனர். 

நிகழ்ச்சி டிரெய்லருக்கு:

- ஷாலினி நியூட்டன் - 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!