சட்டையைக் கழட்டும் விஜய் டிவி...அடுத்த சிவகார்த்திகேயன் உருவாக்கமா?

விஜய் டிவியின் சமீபத்திய புதுவரவு ’கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சி. வயது வரம்பு, இத்தனை நபர்கள் தான் ஆட வேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நடன நிகழ்ச்சி. நிகழ்ச்சி நீதிபதிகளாக பிரியாமணியும், நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டரும் பங்கேற்கின்றனர். இரண்டு எபிசோட்களை மட்டுமே கடந்துள்ள இந்த நிகழ்ச்சியை சரவணன் மீனாட்சி தொடரின் வேட்டையன் பாத்திரத்தில் நடிக்கும் கவின் , மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் நாயகி பிரியா பவானி ஷங்கரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சிலர் மற்றும் அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சாப் போச்சு பகுதியின் காமெடியன்கள் என பலரும் காமெடி அதகளம் செய்கிறார்கள். காதலர் தின சிறப்பாக இந்த வாரம் வரவிருக்கும் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் நிகழ்ச்சியின் புரமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தப் புரமோவில் பிரியாமணி கவினைப் பார்த்து நீ எப்படி நான் போட்ட அதே கலரில் சட்டை போடலாம் எனக் கேட்டு அவரே கவினின் சட்டையைக் கழட்டிவிடும் காட்சி காட்டப் படுகிறது.

இதே போல் ஜோடி நம்பர் ஒன் 5ம் சீசனில் நீதிபதியாக இருந்த ரம்யா கிருஷ்ணன் வேண்டுகோளுக்கு இணங்க சிவகார்த்திகேயனின் சட்டையை வற்புறுத்திக்  கழட்டி விட்டார்கள்.

அதே போன்ற சம்பவம் தற்போது கவினுக்கு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் ஓடி, ஒளிந்து கத்தியது நிகழ்ச்சியின் ஒரு பொழுது போக்கு அம்சமாகவே மாறிப்போனது கண்டிப்பாக ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை வெறித்தனமாக பார்த்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அதே ஸ்டைல், அதே போன்ற நடன நிகழ்ச்சி, முன்னாள் நடிகை, சட்டை கழட்டுதல் சாதிப்பாரா கவின். பார்க்கலாம்!

ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடும் விதமாக கங்குலி சட்டையைக் கழற்றி சுற்றியது நாமறிந்ததே. ஆனால் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சட்டையைக் கழற்றுவது சமீபத்திய ட்ரெண்டாகி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!