”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்!

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய்பிரசாந்த். நேரம், வடகறி என முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,

எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு

"உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். பொஸஸிவ் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப் படாதே எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.

எனது காதல் எப்போது உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே ரக்‌ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனதுகுடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.

என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்‌ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்‌ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.

ரக்‌ஷிதாவின் புரிதலுக்கு,

ஒரு கண்டீஷன் யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும். புரிந்துகொள்.

ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்‌ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.

லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார்.

"லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த் ..உம்மா"

டேக் கேர் எவ்ரிபடி உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்.

இவ்வாறாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!