மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் தற்கொலை...தொடரும் சோகம்!

சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். 23 வயதான கே,நிரோஷா செகண்ட்ராபாத்தைச் சேர்ந்தவர்.

பிரபல ஜெமினி தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு , இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அதே நேரம் நிச்சயிக்கப்பட்ட காதலர், நள்ளிரவு 12 மணியளவில் நிரோஷா தன்னிடம் ஸ்கைப் காலில் சண்டை போட்டார் என்றும்  தற்கொலை செய்யப் போகிறார் என்றும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார், எனினும் போலீஸார் சம்பவ இடத்தை நெருங்கும் போது நிரோஷா இறந்துவிட்டாராம்.  

இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சாய்பிரசாந்த் இறந்து மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை சினிமா, மற்றும் சின்னத்திரை உலகைச் சேர்ந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!