சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன்

பிரபலமான ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சி நடத்தும் சொல்வதெல்லாம்  உண்மை நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி பயன்படுத்திய என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்கிற வசனம் இன்றைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

கூடவே சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தில் இதையே பாடலாக்கப்பட்டது. 
அதுவும் இந்தப் படத்தில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. அந்தப் படம் தொடர்பாக  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய  சிவகார்த்திகேயன், இதை வேறு நபர்களிடம் செய்த நிகழ்ச்சியில் இருந்து பயன்படுத்தியதாக சொல்ல  பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறி போய்விட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வணிக ரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? என்று சமூகவலைதளங்களில் பொங்கி தீர்த்தார்.

இப்படி சர்சைகள் கிளம்பினாலும் பட்டி தொட்டியெல்லாம்  இந்த வசனம் பேசாதவர்கள் இல்லை என்கிற நிலைக்கு போனது, கடந்த சிலவாரங்களுக்கு முன் திமுகவின் தேர்தல் விளம்பரத்தில் இந்த என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என பயன்படுத்தி அரசியலிலும் இந்த வார்த்தை அதிரடியை கிளப்பியுள்ளது.

 இப்படியான நையாண்டிகளுக்கு பிறகு சமீபகாலமாக சொல்வதெல்லாம்  உண்மை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தாமல், நடிகை சுதா சந்திரன் நடத்தி வருகின்றார். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் அளவுக்கு பிரபலமாகவில்லை.  தொலைக்காட்சி ரசிகர்கள் அலுத்துக்கொண்ட நிலையில் ,  ஜி தொலைக்காட்சி கடந்த இரண்டொரு நாட்களாக விளம்பரத்தை வெளியிடுகிறது.

அதில் இதுவரை சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அழுகையும், இப்போது சந்தோசமாக இருப்பதுபோன்ற அந்த காட்சியில் நீங்கள் எடுத்து வைத்த பாரத்தை நான் இன்னும் சுமந்துகிட்டுதான் இருக்கிறேன்.   சுமப்பதின் சுகம்தான் நம் பிறப்பின் அடையாளம். கர்வத்தோடு உண்மையை சொல்லப்போகிறேன். உரக்கச் சொல்லப்போகிறேன். ஏப்ரல் 4முதல் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மையில் உங்களைச் சந்திக்கிறேன் என்கிறார். 

இனி 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' எனும் வசனம் ரசிகர்களின் காதுகளை இனிமையாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இனி  லட்சுமி ராமகிருஷ்ணன்  இந்த வசனத்தை பயன்படுத்தாமல் வேறு ஏதாவது லாஜிக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறாரா என பார்ப்போம்.

சி.ஆனந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!