சின்னத்திரை நடிகை பிரதியூஷா தற்கொலை - தொடரும் சோகம்!

மும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா (வயது24). இவர் ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். நம்மூரில் ராஜ் டிவியின் மண்வாசனை (பாலிகா வது) சீரியல் மூலம் மிக பிரபலம்.

இவர் காதல் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனினும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாவதற்குள் மூன்றாவது சின்னத்திரை நடிகையின் மரணம் என்பது கண்டிப்பாக அதிர்ச்சிகரமான ஒன்றே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!