இந்த வாரம் விஜய்,அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து....வீக்என்ட் சேனல் வியூஸ்!

சன் டிவி :

சனிக்கிழமைகளிலும் சிரீயல்கள் படையெடுப்பு அதனால் அதே ஷெடியூல் தான் , நாளை வழக்கமான சண்டே நிகழ்ச்சிகளுக்கு இடையில் புதிய நிகழ்ச்சியாக இணைந்துள்ளது நடிகர் சங்கம் நடத்தும்  நடிகர்களின் சங்கமம். வாரா வாரம் பழம் பெரும் நடிகர்கள் முதல், இன்றைய நடிகர்கள் வரையென நிகழ்ச்சி கலாட்டா காமெடிகள், பல ஃப்ளாஷ்பேக் கதைகளுடன் செல்லவிருக்கிறது. சன் சிங்கர் அடுத்த சீசன் ஆடிஷன் லெவலில் இருப்பதால் கொஞ்சம் சூடு பிடிக்க ஓரிரு வாரங்கள் ஆகும். மாலை 6.30மணிக்கு உதயநிதி ஸ்டாலின், நயன் தாரா நடிப்பில் நண்பேன்டா படம்.... 

விஜய் டிவி:

இந்த வாரம் ஸ்பெஷலே தெறி இசை வெளியீட்டு விழா தான். மதியம் 3மணி முதல் ஐந்து மணி வரை தெறி இசை வெளியீட்டு விழா. அதனால் படம் கட். வழக்கமான கனெக்‌ஷன், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், நீயா நானா , என வீக் எண்ட் கலாட்டாக்களும் உள்ளன. கெட்டப்பய சார் இந்த அட்லி!

கலைஞர் டிவி:

காலை மூவி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் உயிரே உயிரே படக்குழுவுடன் ஒரு சந்திப்பு, 4 மணிக்கு வந்தா மல படம்...

ஜெயா டிவி:

விஜய் டிவியில் விஜய் எனில் ஜெயா டிவியில் அஜித், ஆர்யா, நயன் நடிப்பில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பம் படம். மதியம் சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யா மேனன் நடிப்பில் 180 படம். அப்பறம் ராத்திரி 12மணிக்கு ராசுக்குட்டியாம். அர்த்தராத்திரியிலயுமா? ’

ஜி தமிழ்:

மாலை 4 மணிக்கு இது கதிர்வேலன் காதல், மதியம் 11 மணிக்கு அரசாங்கம்... கேப்டன்டா!

நாங்க அமெரிக்க ரிடர்ன்ஸ் நண்பர்களுக்கு:

ஸ்டார் மூவீஸில் இன்றைக்கு இரவு ஒன்பது மணிக்கே ட்ராகுலா அண்டோல்டுடன் ஹாலிவுட் ஸ்பெஷல் ஆரம்பம்.

நாளை மூவீஸ் நவ்’ல் ஒன்பது மணிக்கு ஏலியன்ஸ் இன் தி ஆட்டிக், இந்தப் படம் ரிலீஸ் ஆனப்போ நான் மறந்துட்டேனே என்கிற மக்களுக்கு விருந்தாக இன்று இரவு 9மணிக்கு பிக்ஸெல்ஸ் படம்..

வீட்டு சிறுசுகளை இதக் காமிச்சே கட்டிப் போடலாம் அதுவும் பத்தாதுன்னா ஜி ஸ்டூடியோவுல பிளேன்ஸ் படம் சாயங்காலம் 7.40க்கு இது இன்னிகே.

- ஷாலினி நியூட்டன் - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!