மீண்டும் சிவாஜி தாத்தா! இல்ல இல்ல அமிதாப் தாத்தா!!

இந்த வருட ஆரம்பமே கல்யாண் ஜுவல்லர்ஸின் எலைட் விளம்பரம் பல விமர்சனங்களுக்கு ஆளாகி, மீம்ஸ்களில் பறக்க விடப்பட்டு படு ஃபேமஸ் ஆகியது....

கல்யாண்ல நான் அம்மாவானேன் அம்மா எனக்கு மகளா மாறினா இப்படி ஒரு டயலாக் தமிழ் டிவி ரசிகர்களால் மறக்கவே முடியாது. எனினும் புரட்சி, போர், சேதாரம், என கம்பீரமாக பேசிய பிரபுவையும், ஹெல்லோ விக்ரம் என்றதும், அப்படியே சிவாஜி தாத்தாவப் பார்த்த மாதிரி இருக்கு என சொல்லிய விக்ரம் பிரபுவையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா.

 

மீண்டும் அந்தக் கூட்டணி கல்யாண் ஜுவல்லரியின் அபூர்வ கலெக்‌ஷன்ஸ் விளம்பரத்தில் வருகிறார்கள். என்னோட பட்ஜெட் வெறும் அஞ்சாறு லட்சம் தான் அதுல இத்துனூண்டு தான் டயமண்ட் வரும்.... அதுல தங்கம்னா கொஞ்சம் கிராண்டா எடுக்கலாம் என்கிறார் அமிதாப் பச்சன்... நீங்க எவ்ளோ சொன்னீங்க அஞ்சாறு லட்சம் , அதே தான் என கிராண்ட் டைமண்ட் நெக்லஸை பிரபு காட்ட விளம்பரம் முடிகிறது.

அப்பாடா நம்ம சிவாஜி தாத்தா... இல்ல இல்ல அமிதாப் தாத்தா வந்துட்டாருப்பா என நமக்கும் கண்ணடிக்கத் தோன்றியது... இன்னும் யூடியூபில் தமிழ் விளம்பரம் வெளியாகாத நிலையில் இந்தியில் பிரபு கேரக்டரில் அமிதாப் பச்சனும், அமிதாப் பச்சன் கேரக்டரில் அவரது மனைவி ஜெயா பச்சனும் வருகிறார்கள். 

இந்தி விளம்பரத்தைக் காண: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!