சீதையின் ராமன் நாயகி மதிராக்‌ஷிக்கு கிடைத்த சர்ப்ரைஸ்!

விஜய் டி.வி-யின் ‘சீதையின் ராமன்’ சீரியலில் என்ட்ரி கொடுத்துவிட்டார் ராமனின் சீதா. ‘யார் இந்த சீதாபிராட்டி..?’ என்று ஆராய்ச்சியில் இறங்கியபோது கிடைத்தன அரிய தகவல்கள்.

பெயர் மதிராக்‌ஷி முந்தில். மகாராஷ்ட்ர மாநிலம், புனே பெண். 20 வயது இளமை. ‘ஓரி தேவுடோய்’ தெலுங்கு படம் மூலம் சினிமா அறிமுகம். ‘சீதா கி ராம்’ சீரியலில், தயாரிப்பாளர் நிகில் சின்ஹாவின் சாய்ஸில் சீதா ஆனவர். ‘ஹீரோயினாக வெள்ளித்திரையில் நடிச்சப்போகூட கிடைக்காத வரவேற்பை சீதாவாகி வாங்கிட்டேன். இந்த ரோல் எனக்குக் கிடைச்சதே பாக்கியம். தொடர்ந்து என சந்தோஷத் துள்ளலுடன் 5 மொழிகளில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய மதிராக்‌ஷி முத்திலுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது பிரபாஸுடன் ஒரு சந்திப்பு..

சீதையின் ராமன் சீரியல் ஷூட்டிங் ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது, இதே இடத்தின் அடுத்தத் தளத்தில் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையறிந்த சீரியல் நடிகர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் என பிரபாஸை சந்தித்து வருகிறார்கள்.
இதில் மதிராக்‌ஷி முந்திலும் ஒருவர்.

இது குறித்து மதிராக்‌ஷி முந்தில் கூறியதாவது, ”எனக்கு மிகவும் ஆச்சர்யம் நான் பிரபாஸை சந்தித்த போது, அவர் “ சீதையின் ராமன்” சீரியல் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார். எத்தனை முறை கேட்டாலும் சிரித்த முகத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார், தொழில் சம்மந்தமாக நிறைய பேசினோம். ஒரு சிங்கிள் ஃபோட்டோ க்ளிக்கும் நடந்தது” என தெரிவித்துள்ளார். ராமனின் சீதையாக “ சீதையின் ராமன்” சீரியலில் வரும் நாயகி மதிராக்‌ஷி முந்தில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!