டிவி நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் - போலீஸை மிரட்டிய காதலன்! | Doctors confirm that Pratyusha Banerjee was Pregnant

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (19/04/2016)

கடைசி தொடர்பு:11:09 (19/04/2016)

டிவி நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் - போலீஸை மிரட்டிய காதலன்!

பிரபல டிவி நடிகை பிரதியூஷா சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ராஜ் டிவியின் மண்வாசனை சீரியலில் ஆனந்தி கதாபாத்திரம் மூலம் நம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல பிரபலம் பிரதியூஷா பேனர்ஜி. இவரது தற்கொலைக்கு பிரதியூஷாவின் காதலனும், டிவி நடிகருமான ராகுல் தான் காரணம் என விசாரணையில் உறுதியாகவே தற்கொலைக்குத் தூண்டியவர் என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வந்தார். பிரேத பரிசோதனையில் பிரதீயூஷா பேனர்ஜி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும், மேலும் இறப்பதற்கு முன் கருவுற்றிருந்து அபார்ஷன் செய்துகொண்டிருப்பதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மும்பை பங்கூர் போலீஸார் காதலன் ராகுல் சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது திடீரென தனக்கு நெஞ்சுவலி வந்ததாகக் கூறவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருந்த ராகுலை மீண்டும் போலீசார் அழைத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவர் குளியலறைக் கதவைப் பூட்டிக்கொண்டு வெகுநேரம் ஆகியும் திறக்கவில்லை.

இதுகுறித்து உறவினர்கள் அங்குள்ள மருத்துவர்கள், காவலர்களிடம் தெரிவித்தனர். அதே சமயம் குளியலறையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்தார் ராகுல் சிங். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் வெளியிலிருந்தே ராகுலுக்கு ஆலோசனைகள் வழங்கியதை அடுத்து ராகுல் வெளியே வந்தார்.

பின்னர் மருத்துவர்கள் அறிவுரை கூறி ராகுலை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். யாரும் தன்னை விசாரிக்கக் கூடாது , தனக்கு இடையூறு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இப்படி மிரட்டியதாக பிரதியூஷாவின் நண்பர்கள், உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிரதியூஷாவின் தற்கொலையில் இன்னும் மர்மம் நீடித்துவருகிறது.

.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close