சரவணன் மீனாட்சி - மூன்றாம் பாகத்திலாவது ஒன்று சேர்வார்களா...? | Excitement overloaded for Saravanan Meenatchi's third part

வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (15/07/2016)

கடைசி தொடர்பு:13:35 (15/07/2016)

சரவணன் மீனாட்சி - மூன்றாம் பாகத்திலாவது ஒன்று சேர்வார்களா...?

விஜய் டிவியில் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் மற்றும் ஶ்ரீஜா இணைந்து நடித்தனர். அதில் நடித்தபோதே இருவருக்கு இடையில் காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. அதாவது நிஜ ஜோடியானார்கள்.
 
இரண்டாம் பாகத்தில் இர்பன் சரவணனாக நடிப்பார்.. ஆனால் கவின், ரக்‌ஷிதாவை திருமணம் செய்து கொள்வார். இரண்டாம் பாகத்தில் ரக்‌ஷிதாவுக்கு(மீனாட்சி) நடந்த விபத்தின் மூலம் பழைய நினைவுகள் மறந்துபோய்விடும். அதற்குப் பிறகு சரவணனின் ஞாபகங்கள் மறந்து வேட்டையன் கவினை நேசிப்பார் என்றவாறு கதை முடியும். 
 
இப்போது மீண்டும் சரவணன் மீனாட்சி சீசன் 3 ரெடியாகிவருகிறது. இதற்கான குறு முன்னோட்டம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதில் இரண்டாம் சீசனில் நடித்த ரக்‌ஷிதா தான் மீனாட்சியாகவே நடிக்கிறார். மற்றும் சரவணனாக சன்மியூசிக் புகழ் ரியோ நடிக்கிறார்.

சீசன் 3 வரும் திங்கட்கிழமை முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.  2011ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 1200 எபிசோடுகளை கடந்து இன்னும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close