வரதட்சணை புகாரில் தெலுங்கு சீரியல் நடிகை!

 
 
தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டைச் சேர்நதவர் ஶ்ரீவாணி. இவர் தெலுங்கு சீரியலில் முன்னணியில் இருப்பவர் ஶ்ரீவாணி. தெலுங்கில் நட்சத்திர தொகுப்பாளினி. மேலும், கொடவா, ப்ரேமா' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்துவருகிறார். 
 
அண்மைகாலமாக இவரைச் சுற்றி புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவருடைய அண்ணன் மற்றும் அண்ணி இவருடன் வசித்து வந்தனர். சமீபத்தில் அவருடைய அண்ணன் மரணமடைந்தார். தற்போது திடீரென ஸ்ரீவாணியின் அண்ணி,  இவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். 
 
அந்தப் புகாரில், 'அவருடைய அண்ணனின் மரணத்திற்கு நான் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், என் கணவர் இறந்த பிறகு அந்த வீட்டை விட்டு என்னை வெளியேற்ற பார்க்கிறார். மர்மநபர்களை வைத்து எனக்குக் கொலைமிரட்டல் விடுகிறார்'எனவும் ஸ்ரீவாணியின் அண்ணி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விளக்கம் அளிக்க ஆஜராகுமாறு ஸ்ரீவாணிக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்..  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!