வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (02/11/2016)

கடைசி தொடர்பு:15:54 (02/11/2016)

’அன்பானவள்... அடங்காதவள்... அசராதவள்..!’ - இது ‘ப்ரியமானவள்’ ப்ரீத்தி

'உங்களை மாதிரியே நானும் ஒரு காலத்தில் ஜர்னலிஸ்ட்தான் தெரியுமா?’ என்று கண்களைச் சிமிட்டிக் கொண்டே அழகு காட்டுகிறார் ப்ரீத்தி. ’ப்ரியமானவள்’ தொடரில் தற்சமயம் அவந்திகாவையே அலற வைக்கும் அன்பானவள்...அடங்காதவள்...அசராதவள் இவர்தான்.

‘உமாவுக்கு நாலாவது மருமகள் நீங்கதானா?’ என்று கேட்டதுதான் தாமதம், ‘இருக்கலாம்..இல்லாமலும் இருக்கலாம்... இருக்கா இல்லையானு இயக்குனர்தான் முடிவு பண்ணனும்’ என்று நம்மையே சுத்தலில் விட்டுக் கலாய்க்கிறார் ப்ரீத்தி.

’நான் சென்னைப் பொண்ணுதாங்க. படிப்பு முடிஞ்சதும் அடக்க, ஒடுக்கமா, நல்ல பொண்ணா நியூஸ் ரீடரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அது பொறுக்காம என்னோட நியூஸ் சேனல் ஆபிஸ்லையே ’நீ போய் கொஞ்ச நாள் சீரியலில் நடிச்சுட்டு வாம்மா தாயே’னு அனுப்பி வச்சுட்டாங்க. 

அப்படி கொடுத்த என்ட்ரிதான் ‘ஆபிஸ்’ சீரியல். அதுக்கப்புறம் என்னோட ’அட்டகாசமான நடிப்பை’ (ரகசியமாக ‘சும்மா லுலுலுக்கு’ என்கிறார்) பார்த்து வரிசையா நிறைய சீரியல் வாய்ப்புகள். இதோ இப்போ சன் டிவியின் ‘ப்ரியமானவள்’ சீரியலுக்கு ப்ரமோஷன்.’ பட்டாசுக்கு சவால் விட்டு கலகலவென வெடிக்கிறார்.

'ஆபிஸ் சீரியலில் நிறைய ஜாலியான தருணங்களை என்ஜாய் பண்ணியிருக்கேன். வெளில சொல்லிடாதீங்க...ஒரு ஷாட்டுக்கு 70 டேக்லாம் வாங்கியிருக்கேன். ஆனா, அது என்னோட தப்பில்லைங்க....நான் டயலாக் பேசறப்போலாம் ஒரு கொசு படு பயங்கரமா எங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்ததுதான் காரணம். நான் நடிப்பில் பர்பெக்ட்...நம்புங்க மகாஜனங்களே’ கைக்கூப்பி காமெடியாக வடிவேலுக்கே சவால் விடுகிறார். 

’ப்ரியமானவள்’ சீரியலில் நீங்க நடிச்சதில் பிடிச்ச சீன் எது என்று கேட்டவுடன், நம்மை உற்றுப் பார்த்தவர், ‘சொன்னா சிரிக்கக் கூடாது’ என்று பில்டப்புடன் ஆரம்பித்தார்.

‘ப்ரியமானவள் செட்டில் என்னோட முதல் சீனே கடலை சாப்பிடறதுதாங்க. கடலை போடறதைவிட கடலை சாப்பிடறது கஷ்டம்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன். ஹீரோ வரப்போ நான் ஆசுவாசமா உட்கார்ந்து ஒரு ஒரு கடலையா வாய்க்குள்ள தூக்கிப் போட்டு சாப்பிடணும். 

அந்த சீன் எடுத்து முடிக்கறதுக்குள்ள என்னை சுத்தி ஒரு நாப்பது கடலைப் பொட்டலம் இருந்துருக்கும். எல்லாக் கடலையும் வாய்க்குள்ள போகாம கீழே விழுந்ததுதான் மிச்சம். அந்த சீன், நான் ரொம்பவே ரசிச்சது...இயக்குனரை ரணகளமாக்கினது’ என்று கண்களில் நீர்வர சிரித்தவர், ஷாட் ரெடி என்றதும் விர்ரென்று எஸ்கேப்!

-பா.விஜயலட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்