'நீயா நானா?' ஒளிபரப்பு நேரத்தை மாற்றியது ஏன்?

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான ‘நீயா நானா’, கடந்த பத்து வருடங்களாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தான் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பிவருகிறார்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்..? நேரத்தை மாற்றியதால் டி.ஆர்.பி குறைந்ததா..? அல்லது கூடியதா..? என சில கேள்விகளை ‘நீயா நானா’ தரப்பிடம் கேட்டோம்.

“நாங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி ‘நீயா நானா’ நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது, ஞாயிற்றுக்கிழமை காலையில எல்லா டிவிலையும் சிங்கிங் ஷோ, டாக் ஷோனு போட்டுட்டு இருந்தாங்க. அதுனால எங்களுக்கு காலையில டைம் கிடைக்கல. அப்புறம் தான் ‘நீயா நானா’வை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பலாம்னு முடிவு செய்தோம்.

10 வருஷத்துக்கு முன்னாடி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு எல்லா நிகழ்ச்சிகளும் முடிஞ்சு ஏதாவது ஒரு காமெடி நிகழ்ச்சியை போட்டுட்டு ஒளிபரப்பை நிறுத்திடுவாங்க. ஆனால், நாங்க அந்த டைம்ல தான் புது நிகழ்ச்சியை ரிஸ்க் எடுத்து ஆரம்பிச்சோம். நாங்க 11 மணி வரை நிகழ்ச்சி ஒளிபரப்பினாலும் மக்கள் அதை பார்த்தாங்க. ஷோ நல்லா ஹிட்டாச்சு. நல்ல டிஆர்பியும் கிடைச்சது. இரவு நேரத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வெற்றி பெற்றது போல இப்போ மதிய நேரத்தில் ஒளிபரப்பி வெற்றி பெறலாம்னு நேரத்தை மாற்றியிருக்கோம். 

விஜய் டிவியில மதியம் 2 மணிக்கு ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி போடுறாங்க. அந்த நிகழ்ச்சியை நிறைய பேர் பார்க்கிறாங்க. அந்த டைம்ல ‘நீயா நானா’வை ஒளிபரப்பினால் நிறைய புது ஆடியன்ஸ் வருவாங்கனு நினைச்சோம். அதே சமயம் இப்போ காலையில இருந்து மதியம் வரை பெருசா எந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகலை. அதுனால தான் நேரத்தை மாற்றினோம்.
 
நேரம் மாறியதால் இதுவரை டிஆர்பியில் எந்த மாற்றமும் வரலை. வழக்கமாக நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கும் எந்த சிரமமும் இல்லை. எப்போதும் ‘நீயா நானா’வை எத்தனை பேர் பார்ப்பாங்களோ அத்தனை பேர் தான் பார்த்துட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல நிறைய புது ஆடியன்ஸும் சேர்வாங்க. அப்படி சேர்ந்ததும் மறுபடியும் பழைய டைம்மிற்கே வரவும் வாய்ப்பு இருக்கிறது” என்றனர். 

- மா.பாண்டியராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!