Published:Updated:

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

Vikatan
பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!
பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

ந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம்புதிய சூப்பர் ஹிட் திரைப்படம்....”  இந்த டேக் லைன் டிவியில் தென்படுகிறதென்றாலே பண்டிகை தினம் ’ஆன் தி வே’ என்று அர்த்தம். அன்றைய தினங்களில் விடுமுறை கிடைப்பதோடு இலவச இணைப்பாக டிவியில் புதுப்படங்கள் ஒளிபரப்பாகும். ஜாலியா, கெத்தா, கால் மேல கால் போட்டு, வீட்டிலேயே புதுப்படங்களை டிவியில் பார்த்து தெறிக்கவும் விடுவோம். இந்தப் பொங்கலுக்கும் மாஸா சில புதுப்படங்களும், மாஸ் கம்மிய சில பழைய படங்களும் ஒளிபரப்பாகின்றன. என்னென்னா படங்கள்னா..... 

சன் டிவி:-

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

முதல் நாளே கொடியை பறக்கவிடத் தயாராகிவருகிறது சன் டிவி. தனுஷ், த்ரிஷா, அனுபமா நடிப்பில் துரைசெந்தில் குமார் இயக்கிய படம் ’கொடி’. முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால் பெரிதும் பேசப்பட்ட படம். கடந்த தீபாவளிக்கு ரிலீஸாகி, பொங்கலுக்கே டிவியில் றெக்க கட்டி பறக்க வந்துவிட்டது கொடி. 

ஹாரர் படம் தான் என்றாலும் காமெடியில் திரையரங்கையே அதகளம் செய்த படம் ’தேவி’. விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகிப் பெரிய ஹிட்டடித்தது. ரூபி என்ற க்யூட் பேயின் அட்ராசிடிக்கும், பிரபுதேவாவின் சல்மார் டான்ஸுக்குமே பார்த்து ரசிக்கலாம்.  

விஜய் டிவி:-

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

இந்திய கிரிக்கெட் விளையாட்டின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவித்திருப்பதால் அவர்களது ரசிகர்கள் செம அப்செட். தோனிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இதோ பொங்கலுக்கு தோனியின் பயோபிக் படமான ’M.S. Dhoni: The Untold Story’. கடந்த செப்டம்பர் 30ல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட். இந்தியைத் தவிர மற்ற மொழிகளில்  டப்பிங் செய்யப்பட்டாலும் டோனி என்ற ஒற்றை வார்த்தைக்கே வசூல் குவிந்தது. 

அடுத்த நாளில் (ஜனவரி 15) ஜி.வி.பிரகாஷ், நிக்கிகல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி காமெடியில் சேட்டை செய்த ’கடவுள் இருக்கான் குமாரு’ ஒளிபரப்பாகிறது. 

ஜெயா டிவி:-

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

கடந்த வருடத்தின் வசூல் லிஸ்டில் நம்பர் ஒன் ’ரெமோ’. எஸ்.கே.வின் ரொமான்ஸூம், நர்ஸ் ரெமோவின் கலாட்டாவும், டாக்டர் காவ்யாவின் சுட்டித்தனமுமாக  எல்லோரின் லைக்ஸூம் குவித்த படம். அனிருத் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று கலர்ஃபுல் ரெமோ விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது

இப்படத்துடன் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய தொடரியும் ஒளிபரப்பாகிறது. இரண்டுமே செம விஷுவல் ட்ரீட் தான். 

ஜீ தமிழ்:-

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

புதுப்படங்களான விஜய்சேதுபதி, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான அதிரடி ஆக்‌ஷன் படமான ‘றெக்க’ முதல் நாள் மாலையும், அடுத்த நாள் விக்ரம், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இருமுகன்’ படத்தையும் ஒளிபரப்பவிருக்கிறது. தவிர, ’சேதுபதி’ மற்றும் ’ஒரு நாள் கூத்து’ இரண்டு படங்களும் ஒளிபரப்பாகவிருக்கின்றன. 

கலைஞர் டிவி:

பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகும் புதுப்படங்கள் இவைதான்!

இந்த முறை  சிறப்பு சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறதாம் கலைஞர் டிவி. அதனால் புதுப்படங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது போல தெரிகிறது. சமீபத்தில் வெளியான “பழைய வண்ணாரப் பேட்டை” படமும், மற்றொரு படமாக மலையாள தமிழ் டப்பிங் படம் ஒளிப்பரப்பவிருப்பதாகவும் தகவல். 

99.99% இது தான் சின்னத்திரை பட்டியல். சில மாற்றங்கள் இருப்பின், கண்டிப்பாக அப்டேட் செய்கிறோம்.

ஹாப்பி பொங்கல்! 

-பி.எஸ்.முத்து

Vikatan