Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த சீரியல்லாம் பிடிச்சிருந்தா நீங்க ஜென்Z தான்! #90s_Serials

ஜென் Z

கடந்து போன 90களில் பிறந்தவர்களை 'ஜென் Z' என்பார்கள். அதாவது ஜெனரேஷன் இசட். அப்போது குட்டி டிவி ரசிகர்களாய் இருந்து இன்று வளர்ந்துவிட்டவர்களிடம் கேட்டால் ’அது ஒரு கனாக்காலம்’ என்று கட்டாயம் சொல்வார்கள். அந்தளவிற்குக் குழந்தைகளுக்கான தொடர்களும், நிகழ்ச்சிகளும் டிவி உலகைஆக்கிரமித்திருந்த காலமது. அமானுஷ்ய உலகம் தொடங்கி, அதிசய உலகம் வரை அவர்களுக்குக் கிடைத்த டிவி தொடர்அனுபவங்களே தனிதான். பேய், பிசாசு, பூதமென்று தொடர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு டி.ஆர்.பியை குவிக்கும் இந்நாளில்,90களின் குட்டீஸ்களைக் குஷிப்படுத்த ஒரு ரீகேப். 


சக்திமான்: 

1997ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்தத் தொடர், தமிழிலும் டப் செய்யப்பட்டு குட்டீஸ்களைக் கவர்ந்திழுத்தது. சக்திமான் ட்ரெஸ், சக்திமான் ஸ்டிக்கர்ஸ், பென்சில், எரேசர் என்று குழந்தைகளுக்கான எல்லாப் பொருட்களிலும் இடம்பிடித்திருந்தார் சக்திமான். சக்திமானாக முகேஷ் கண்ணா, சுழன்று சுழன்று எதிரிகளைப் பந்தாடுவார். பண்டிதர் கங்காதர் மாயதர்ஓம்கர்ணா சாஸ்திரியாக முட்டை கிளாஸ் ஒன்றைஅணிந்துகொண்டு, ரிப்போட்டர் கீதாவுடன், போட்டோகிராபராக குழந்தைகளுக்குச் சிரிப்பு மூட்டுவார். அமானுஷ்ய தீய சக்திகளை அழிக்க, அற்புத வரம் பெற்ற சக்திமான், குழந்தைகளையோடு பெரியவர்களையும் மகிழ்வித்தது. 

`சக்திமான்...சக்திமான்’ என்ற பாடல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிக்க ஆரம்பித்தவுடனே அனைத்துக் குழந்தைகளும் டிவியின் முன்புதான் இருப்பார்கள் என்பதே இதன் வெற்றி ரகசியம். 

ஷக்கலக்க பூம் பூம்:


சஞ்சுவையும் அவனுடைய மந்திர பென்சிலும் அடித்த லூட்டிகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தலையுள்ள மந்திரப் பென்சில் ஒன்று விளையாட்டாக சஞ்சுவிற்குக் கிடைத்துவிட அதன்மூலம் அவனால் எதையும்  உருவாக்க முடிகிறது. சஞ்சுவும், அவனது நண்பர்களும் இணைந்து அந்தப் பென்சிலைத் திருட நினைப்பவர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதுதான் மீதிக் கதை. சக்திமான் போலவே இந்தப் பென்சிலும் குழந்தைகளிடையே மிகப் பிரபலம். முக்கியமான பாயின்ட், ஷக்கலக்க பூம்பூம் தொடரில் கர்ணாவாக நடித்த குழந்தை, இன்றைய பப்ளி பேபி ‘ஹன்சிகாமோத்வானி’. 


மைடியர் பூதம்:

கொஞ்சம் 90களில் இருந்து விலகியிருந்தாலும், 2004ம் ஆண்டில் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடருக்கும் குட்டிரசிகர்கள் ஜாஸ்தி. மூசா என்னும் குட்டி பூதமும், அதன் பூதக் குடும்பமும் குழந்தைகளுடன் இணைந்து அடிக்கும் லூட்டிதான் கதை. ராஜசேகர், காந்திமதி, வியட்நாம் வீடு சுந்தரம், கஜேந்திரன் என்று இந்த தொடரில் நட்சத்திர பட்டாளம் ஜாஸ்தி. பட்டணத்தில் பூதத்திற்குப் பிறகு ஹைடெக் பூதம் என்றால் அது மூசாவும், அதன் தாத்தாவும் தான். குழந்தைகளை மாயாஜாலங்களால் மகிழ்வித்தது இந்தத் தொடர்.

துப்பறியும் சாம்பு:

தூர்தர்ஷனில் தொடராக உருமாற்றம் பெற்று வெளியான தேவனின் பிரபலமான நாவல் இது. கலாட்டா, ஹுயூமர், கிரைம் என்று கலந்துகட்டி அடித்தது இந்த தொடர். துப்பறியும் நீளமூக்கு சாம்புவாக ஓய்.ஜி.மகேந்திரன் அடிக்கும் லூட்டிகள், எதிர்பாராமல் அவரால் கண்டறியப்படும் குற்றங்களுக்கான தீர்வுகள் என்று கிளாசிக் வரிசையில் இடம்பெறும் இந்தத் தொடருக்கும் குட்டி ரசிகர்கள் பட்டியல் எக்ஸ்ட்ரா பிட்.

மாயா மச்சிந்த்ரா:

சக்திமான் போலவே இவர் உள்ளூர் சூப்பர்மேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடரில் நாயகன், டான்ஸ் மாஸ்டர்பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத். ஏழை மக்களைக் காக்க ஓடிவரும் சூப்பர் ஹீரோவாக அதற்கேற்ற உடைகளில் கலக்கிய இந்த மாயா மச்சிந்த்ரா 90களில் குழந்தைகளின் நடுவே டாக் ஆப் தி டவுன்.

இன்னும் கூட காத்து கருப்பு, ஜென்மம் எக்ஸ், ஜீ பூம் பா என்று அடுக்கிக் கொண்டே சென்றால் பைசா கோபுர அளவிற்கு உயரும் எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு பிடித்தமான தொடர்கள் 90களில் ஏராளம். அவற்றை இக்காலத்துக்கு ஏற்றமுறையில் ரீமேக் செய்தால் இன்றைய ஹைடெக் குழந்தைகளையும் கட்டிப் போட சேனல்களால் முடியும். முடியும்தானே!

-பா.விஜயலட்சுமி                

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்