Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தமிழ் சீரியல்களில் தவிர்க்க முடியாத 5 விஷயங்கள்!

இளமையான அம்மா, அதை விட இளமையான பாட்டி, அம்மாஞ்சி மகன்கள், கொடுமைக்கார மாமியார்கள் அல்லது அரக்கக் குணம் கொண்ட மருமகள் எனத் தமிழ் சீரியல்களின் டெம்ப்ளேட்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சில குறிப்பிட்ட குணங்கள் இல்லாத தமிழ் தொடர்களே இல்லைன்னு சொல்லலாம். அதுவும் கடந்த இருபத்து அஞ்சு வருஷமா இப்படியேதான் இருக்குங்கிறதுதான் சோக ஸ்டோரி!

நகை குடோன் ஆன்ட்டிஸ் 

எவ்வளவு ஸ்பீடா போட்டுகிட்டாலும் முக்கால் மணி நேரம் டைம் எடுக்கும் அளவுக்கு நகை போட்டு ஒரே ஒரு ஆன்ட்டியாவது ஒவ்வொரு சீரியலிலும் எண்ட்ரி கொடுப்பார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னான்னு பார்த்தால் நைட் 3 மணிக்குக்கூட.. ஏன்  24 மணிநேரமும் அந்தக் கிலோ கணக்கான நகைகளோடத்தான் சுத்திகிட்டு இருப்பாங்க. 

தமிழ் சீரியல்

 

க்யூட் பேபிஸ்  

இந்தக் குழந்தைகள் நம்ம சீரியல் பார்ட்டிகளிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கே, சொல்லவே வேண்டாம். எந்த கேரக்டரையும் தேவையில்லாமல் யூஸ் பண்ணக்கூடாது என்கிற விதிமுறையை அந்தக் குழந்தைகளிடம் இருந்துதான் ஆரம்பிப்பார்கள். நிறைய வாயடிக்கும் பெண் குழந்தைனா கண்ணை மூடிகிட்டு சொல்லலாம் அதைக் கண்டிப்பா வில்லன்கள் கடத்துவாங்கன்னு. சில சீரியல்களில் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் எல்லாம் கொடுக்கவே மாட்டார்கள் போலிருக்கு. எட்டு மாசக் குழந்தை எத்தனை வாரங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். ஆனால், அதோட அப்பா மட்டும் கொலைப்பழி விழுந்து ஜெயிலுக்குப் போய் ஆயுள் தண்டனை அனுபவிச்சு, அங்கு நல்லவனா மாறித் திரும்பி வந்திருப்பார். 

தமிழ் சீரியல் பேபி

கஷ்டம் ப்ரோ 

"உன்னை கொன்னு, கத்தியால் குத்தி, கழுத்தறுத்து,கடல்ல வீசி, பெட்ரோல் ஊற்றி எரிச்சிடுவேன்'ங்கிற தெலுங்கு டப்பிங் பட டயலாக் மாதிரி ஒவ்வொரு நாடகத்தின் முன்னணி கேரக்டர்கள் படும் கஷ்டம், இந்த உலகத்தில் யாருக்குமே வரக்கூடாது என்று பார்க்கிற எல்லோருமே வேண்டிக்குவாங்க. அப்படி ஒரு கஷ்டம்லாம் சாதாரண மனுசனுக்கு வந்தா ஒவ்வொருத்தரும் நாலைந்து தடவை தற்கொலை பண்ணிக்குவாங்க. இருந்தாலும் அவர்கள் அதையெல்லாம் அசால்ட்டாக் கடந்து போவாங்க பாருங்க, அதான் கெத்து!

தமிழ் சீரியல்

வியாதி -

டிஸைன் டிஸைனான வியாதிகள் சினிமாவில்தான் வரும். ஆனா சீரியலில் பார்க்கிறவர்களுக்குப் புதுப்புதுப் பெயரைச் சொல்லி பயமுறுத்தாமல் சாதாரண காய்ச்சல், வயிற்று வலியென்றுதான் அட்மிட் ஆவாங்க. ஆனா அதோட ரிசல்ட் வேற மாதிரி இருக்கும். ஷார்ட் டைம் மெமரி லாஸ்க்கு சிகிச்சையா வாழைப்பழம் கொடுத்து, போகிற போக்கில் மெடிக்கல் மிராக்கிள் பண்ணுவார்கள். இன்னும் சில தொடர்களில் வயிற்றுக்குள் கத்தியை விட்டு செம சுத்து சுத்தியிருப்பார் வில்லன். இருந்தாலும் குத்து வாங்கியவரின் நாலு பையன், இரண்டு பெண்கள், பேரன் பேத்திகள் (??!!!) வேண்டுதலில் அந்த மனிதர் பிழைத்து வந்து நிற்பார். இன்னும் சில சீரியல்களில் ஒரே அறையில் செக்சன் 302 செய்துவிட்டு நான்கைந்து வாரங்களுக்கு அந்தப் பிணத்தை வைத்துக்கொண்டு அலைவார் வில்(லி)லன். 

மிஸ்டர் ஹேண்ட்சம் 

ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்குப் போனா... எப்படா கையில ரிமோட் கிடைக்கும்னு தேவுடு காத்து, தலையெழுத்தே என சீரியலும் பார்க்கும் ஆண்களுக்கு வயிற்றெரிச்சல் கிளப்பும் மேட்டர் இது. ஒரு ஆண் கேரக்டர் இருப்பார். ஆளும் சுமார்தான். அதில் அவருக்கு வேலை வேறு போயிருக்கும். இருந்தாலும் அவருக்கு ஒரு எக்ஸ் லவ் இருக்கும். அந்த லவ்வர் இவரை மீண்டும் ரொமான்ஸ் செய்து பழிவாங்கத் துடிப்பார். ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் பழைய ஆபிஸில் வேலை பார்த்த கொலிக்கின் ஒன்சைட் லவ் என வதவதவென அவரை லவ் டார்ச்சர் செய்து கொண்டிருப்பார்கள்.

என்னதான் இப்படி லிஸ்ட் போட்டாலும் சீரியல்கள் பார்க்கிற கிக்கே தனி!

- வரவனை செந்தில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement