மலையாள சேனல்களில் கலக்கும் டாப் சீரியல் நடிகைகள் இவர்கள்...

அம்பிகா, ராதா முதல் நயன், நித்யா மேனன் வரை பல திறமையான நடிகைகளை திரையுலகிற்கு தந்திருக்கிறது கேரளா. அங்கே சின்னத்திரையிலும் திறமை மற்றும் அழகால் கலக்கிக்கொண்டிருக்கும் டாப் சீரியல் ஹீரோயின்களை பற்றி பார்க்கலாமா...

நடிகை மேக்னா வின்சென்ட்

மேக்னா வின்சென்ட் : 

நம் ஊர் 'தெய்வம் தந்த வீடு' சீரியலின் சீதாவே தான். தமிழ் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பாக , கேரள நாட்டில் பல மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். சூர்யா டிவியில் மோகக்கடல், சக்ரவாகம், ஏசியாநெட்டில் ஆட்டோகிராஃப், மழவில் மனோரமா சேனலில் பரினாயம், இந்திரா என எல்லா சேனல்களிலும் கலந்துகட்டி நடித்து டாப் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் மேக்னா.

நடிகை காயத்ரி அருண்


காயத்ரி அருண் : 

'என் கணவன் என் தோழன்' தொடரின் மலையாள வெர்ஷனான  'பரஸ்பரம்' தொடரின் ஹீரோயின் காயத்ரி அருண் தான். 2016 ஆம் ஆண்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை விருதையும், 2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை எனும் விருதையும் வென்றிருக்கிறார். காயத்ரி சிறப்பான பாடகியும் கூட.

 

நடிகை ஶ்ரீலயா

ஶ்ரீ லயா :

பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை லிஸ்ஸி ஜோஸின் மகள்தான் ஶ்ரீ லயா. கண்மனி, பாக்யதேவதா,மூணுமனி ஆகிய நாடகங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ஶ்ரீலயா 'குட்டீம் கொலும், மாணிக்யம், கம்பார்ட்மெண்ட்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திறமையான நடனகலைஞரான ஶ்ரீ லயாவிற்கு 'குட்டிமணி' எனும் செல்லப்பெயரும் உண்டு. 

 

சீரியல் நடிகை வரதா

வரதா :

சுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் வரதா இப்போது சின்னத்திரையில் பிஸியான நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலின் 'அமலா' தொலைக்காட்சி தொடரில் நாயகியாய நடித்த வரதா, தற்போது 'பிரணயம்' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்துவருகிறார். 'காதலிக்கலாமா' என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் வரதா. தெரியாமப்போச்சே...

 

சீரியல் நடிகை மாளவிகா வேல்ஸ்
 

மாளவிகா வேல்ஸ் :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'நந்தினி' தொடரின் ஜானகிதான் மாளவிகா வேல்ஸ். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான மாளவிகா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான பொன்னம்பிலி எனும் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

சீரியல் நடிகை சராயு
 

சராயு :

கிட்டதட்ட நாற்பது திரைப்படங்களுக்குமேல் நடித்திருக்கும் சராயு, மலையாள சின்னத்திரை உலகிலும் பிரபலமான நடிகையும் கூட. ‘வேளாங்கன்னி மாதாவு’, ‘மனப்பொருத்தம் ஈரன் நிலவு’ ஆகிய தொடர்களிலும் நடித்திருக்கும் இவர், தமிழில் 'தீக்குளிக்கும் பச்சைமரம்' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதுவும் தெரியாமப்போச்சே...

சீரியல் நடிகை கௌரி கிருஷ்ணன்


கௌரி கிருஷ்ணன் :

'டிராபிக்' திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் கௌரி கிரஷ்ணன். அதன் பிறகு, சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான 'அநியாதி' என்ற சீரியலில் நடித்தார். 

சீரியல் நடிகை ஸ்டெபி லியோன்


ஸ்டெபி லியோன் :

மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான 'மானசவீணா' சீரியல் மூலம் அறிமுகமான ஸ்டெபி, அதன்பின் ஏசியாநெட் சேனலின் 'அக்னிபுத்ரி' எனும் திகில் தொடரில் ஹீரோயினாக நடித்தார்.

சீரியல் நடிகை நிகிதா ராஜேஷ்


நிகிதா ராஜேஷ் :

பிரபல சீரியல் இயக்குநர் ராஜேஷின் மகள். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமான நிகிதா நிறைய நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார். மஞ்சுருக்கும் காலம் என்ற சீரியலிலும் நிகிதாவை நீங்கள் பார்க்கலாம்.

- டப்பாவாலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!