Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாரா, அனுஷ்கா சீரியலில் நடித்தால்...!?

சீரியலில் சீனியர் ஹீரோயின்ஸ் தானே நடிக்கிறார்கள். அதனால், ஒரு சேஞ்சுக்கு, நம் மகிழ்ச்சிக்கு இன்றைய தேதியில் உச்சத்தில் இருக்கும் ஹீரோயின்களும் சீரியலில் நடித்தால் எப்படியிருக்கும்னு மாற்றி யோசிப்போமா மக்களே...

ஹீரோயின்ஸ்

'மூணு' படத்தில் அழுது அழுதே 'அடுத்த கலைராணி' என அவார்ட் வாங்கிய ஸ்ருதிஹாசன், சோக சீரியல்களில் பின்னி பெடலெடுப்பார் என தாராளமாய் நம்பலாம். அப்பாவிற்கு பக்கவாதம், அம்மாவிற்கு ஆஸ்துமா, தறுதலை தம்பி, வெகுளியான தங்கை, அமைதியான அக்கா, அடங்காத அக்கா கணவன் என சோகத்துக்கு மேல் சோகமாக அப்பி கிடக்கும் அசாதாரணமான ஒரு குடும்பம். அந்த குடும்பத்தை கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்தமாய் ஸ்ருதியின் தலையில் விழுகிறது. அதை சமாளித்து எப்படி ஜெயித்து காட்டுகிறார் என்பது தான் கதை. நாடகத்தின் டைட்டில் `வாழ்வே மாயம்'.

'அருந்ததி', 'ருத்ரமாதேவி', 'பாகுபலி' என ராணி வேடங்களிலேயே நடித்து ரம்யா கிருஷ்ணனுக்கே சவால் கொடுத்து வரும் அனுஷ்காவுக்கு பக்தித்தொடர் தான் சரியான சாய்ஸ். ஜக்கம்மா தேவியின் அதி தீவிர பக்தையான அவர், தனக்கும், தன்னை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை தெய்வத்தின் துணையோடு மின்னல் வேகத்தில் விரட்டும் மிரட்டலான கதை. நாடகத்தின் பெயர் `எங்கள் ஜக்கம்மா'.

அஞ்சலிக்கு கிராமத்து மணம் கமழும் கதை தான் கரெக்ட். எப்படியும் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவதொரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்து கொண்டு தான் இருக்கும். அப்படி ஒரு சோக ராகத்தை ஸ்வரம் பிரிக்கிறோம். தமிழ் மக்களின் பார்வைக்கு படம் பிடிக்கிறோம். அஞ்சலியின் பெயர் காமாட்சி எனவும், ஹீரோவின் பெயர் கதிரவன் எனவும் ஃபிக்ஸ் செய்தால் `கதிரவன் காமாட்சி' என சூப்பர் டைட்டில் ரெடி.

ஹீரோயின்ஸ்

`ரிச் கேர்ள்' லுக்கில் இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ஹை-டெக் ஆபிஸ் கதை.  காஜல் பணிபுரியும் அலுவலகம் தான் கதைக்களம். இரண்டு இன்க்ரீமென்ட்டுகளுக்கு இடையே அந்த அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் சந்தோஷம், துக்கம், நட்பு, பிரிவு, காதல், ஏமாற்றம், துரோகம் அப்புறம் கொஞ்சம் வேலைகள் பற்றி சுவாரஸ்யமாய் சொல்லி சீரியலை செமத்தியாக கொண்டு போறோம். நாடகத்தின் பெயர் `இன்க்ரீமென்ட்'

த்ரிஷா நடிக்கும் ‘கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா'. கலகலப்பான நகைச்சுவை நெடுந்தொடர். படிக்கும்போதே சூப்பரா இருக்குல்ல. அது தான் கதையும். த்ரிஷாவை பெண் பார்க்க வரும் ஆண்கள் பஜ்ஜி, சொஜ்ஜி, எக்ஸ்ட்ரா கப் காபி எல்லாம் அமுக்கிவிட்டு `அதிரசம் இல்லாதது தான் குறை' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். என்னதான் இருந்தாலும் ஆறிப்போனால் காபியும் கசக்கும், மிளகாய் பஜ்ஜியும் இனிக்கும் இல்லையா... அப்படி ஒரு மாற்றம் நடக்கிறது த்ரிஷாவின் வாழ்க்கையில். அது தான் `கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா' சீரியலின் கதை.

கல்லூரியில் படித்து வருகிறார் நாயகி நயன்தாரா. துருதிர்ஷ்டவசமாக, நயன்தாராவின் நண்பர்கள் எல்லோரும் ரெட் - டி ஷர்ட் அணிந்த ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கிறார் நயன். இந்த இடம் தான் த்ரிலிங்கான இடம், மனசை தேத்திக்கோங்க பயந்துடாதீங்க. ரெட் டிஷர்ட் அணிந்து வந்து கொலை செய்பவர் வேறு யாரும் அல்ல, அது நயன்தாரா தான். அவருக்கு மல்டி பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர். நாடகத்தின் பெயர் `ரத்தத்தின் நிறம் சிவப்பு'.

- ப.சூரியராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்