Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அச்சச்சோ நான் எங்கயும் போகலங்க’ - ‘திருமதி செல்வம்’ அபிதா!

அபிதா

ன்னுடைய பதினான்காவது வயதில் நடிப்புத் துறைக்குள் நுழைந்தார் அபிதா. பாலா இயக்கிய 'சேது' படத்தில் 'அபிதகுஜலாம்பாள்' கதாபாத்திரத்தில் நடித்தார். பலருக்கும் அந்தப் பெயர் பரிட்சயம் ஆனது. அதன் பிறகு, இதுவரை தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்கும் முன்பே ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிமுகத்தை வைத்துதான் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை அடுத்து சன் டி.வி யில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' சீரியலில் ஆறு ஆண்டுகள் நடித்து முடித்தார். தற்போது எந்த தொடர்களிலும் நடிக்கவில்லை. சில வருடங்களாக காணாமல் போனவரை கண்டுபிடித்துப் பேசினோம்,

'சில வருடங்களா உங்களை பார்க்க முடியவில்லையே?'

''அச்சச்சோ.. நான் எங்கயும் போகலங்க. இரண்டாவது குழந்தை பிறந்ததால பிரேக் எடுத்திருக்கேன். நடிக்காம இருக்க முடியுமானு தெரியல. இந்த பிரேக்குக்குப் முன்னாடி 'பொன்னூஞ்சல்' என்கிற சீரியல்ல நடிச்சிட்டு இருந்தேன். குழந்தைகளை பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தினால் பிரேக் எடுக்க வேண்டியதாப் போச்சு. இப்பவும் சீரியல், சினிமா என தொடர்ந்து வாய்ப்பு வந்திட்டே இருக்கு. கூடிய சீக்கிரமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் என்னை எதிர்பார்க்கலாம்''

'பக்கா தயிர் சாதப் பொண்ணா நடிச்சிருந்த உங்களுக்கு, இப்பவும் தயிர் சாதம்தான் பிடிக்குமா?'

''இப்படி எல்லாமா நினைச்சுட்டு இருக்கீங்க. எனக்கு நான்வெஜ் ரொம்ப பிடிக்கும். சிக்கன் குழம்பு, மீன் குழம்பு நல்லா சமைக்கவரும். நல்லா சாப்பிடுவேன். 

'கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்லாத் தமிழ் பேசுறீங்களே எப்படி?'

''கேரளா என்னோட பூர்விகமா இருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அது மட்டும் இல்லாம எனக்கு தமிழ் மொழி பிடிக்கும். தமிழ் பேசி நடிக்கவும் பிடிக்கும். ஆனா இப்ப வேற மொழிப் பேசுற பல பேருக்கு தமிழ் உச்சரிப்பு சரியா இருக்கிறது இல்ல. அதைப் பார்க்கும் போதுதான் கவலையா இருக்கு.''

அபிதா

'ஏன்.. தமிழில் திரையுலகில் நிறைய பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்தவங்க தானே?'

''அது சரிதான். ஆனா, இப்போ நான் பல சீரியல்களைப் பார்க்கிறேன். இவங்களுக்கு தமிழ் தெரியல என்பது நல்லாவே தெரியும். அந்த அளவுக்கு அவங்களோட உச்சரிப்பு இருக்கும். ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு தூரம் இழுத்துப் பேசுறாங்க, இல்லனா ரொம்ப சுருக்கமாப் பேசுறாங்க. இதை பொறுமையா பார்க்கிற ஆடியன்ஸ்சுக்கு சில நேரத்துல சலிப்பூட்டும். இதையெல்லாம் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி நடிச்சாப் பரவாயில்லனு நினைக்கிறேன்''.

'அப்போ சின்னத்திரை நிறைய மாறியிருக்குனு நினைக்கிறீங்களா?'

''கண்டிப்பாக. பழைய நடிகர்கள் நிறைய பேர் வாய்ப்பில்லாமப் போயிட்டாங்க என்பதுதான் நிதர்சனம். இப்போ சீரியலுக்கு புதுசா வரவங்க நிறைய பேர் பொழுதுபோக்குக்காக தான் வர்றாங்க. அதே நேரம் அவங்களுக்கு கொடுக்கிற சம்பளத்தைப் பத்தியும் கவலைப்படுறது இல்ல. அவங்களுக்குத் தேவை பப்ளிசிட்டி தான். இதனால இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு செலவு குறைவாகவும், வருவாய் அதிகமாகவும் கிடைக்குது. புது நடிகர்களுக்கும் வாய்ப்பு நிறையத் தர்றாங்க. இந்த மாற்றத்தால அனுபவமிக்க பல பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறதில்ல. மொத்தத்துல, 'மாற்றம் ஒன்றுதான் மாறாதது'னு சொல்ற மாதிரி எல்லாத்துலயும் தொடர்ந்து மாற்றம் இருக்கத்தான் செய்யும். அதை ஏற்றுக் கொண்டு கடந்து போகும் பக்கும் நமக்கு இருக்கணும். காத்திருக்கும் மனப்பக்குவமும் கண்டிப்பாக வேண்டும்''. 

'நீங்க தீவிர கடவுள் பக்தையாமே?'

''ஆமா.. எனக்கு ஜீசஸ்னா உயிர். எந்த ஒரு காரியத்தையும் அவரை வேண்டாம நான் பண்ணினது இல்ல. சந்தோஷம், கஷ்டம் என எதுவாக இருந்தாலும் சரி. என்னோட நம்பிக்கையும் வீண் போனது இல்ல. அதை நிரூபிக்க என்னோட வாழ்க்கையில பல சம்பவங்கள் நடந்திருக்கு. ஒவ்வொரு முறையும்  'உன்னோட இருக்கே'னு எனக்கு உணர்த்திக்கிட்டே இருக்கார்''

நடிகை அபிதா குடும்பத்தினருடன்

'உங்கள் குடும்பம், குழந்தைகள் பற்றி?'

''கணவர் சுனில் பிஸினஸ்ல பிஸியா இருக்கார். அல்சா, அன்சிலா என எங்களுக்கு இரண்டு பொண்ணுங்க. பெரியவள் அல்சா ஒன்றாம் வகுப்பு படிக்கிறா. சின்னப் பொண்ணு அன்சிலாவுக்கு இரண்டு வயசு ஆகுது. நான் ஷூட்டிங், வேலைனு பிஸியா இருக்கும் போது என்னோட அம்மாதான் அவங்களை  முழுக்க பாத்துப்பாங்க. அம்மா மாதிரி நான் கூட அவங்களை பொறுப்பா பாத்துப்பேனாங்கிறது தெரியல. அம்மா அம்மாதான்'' என்று முடிக்கிறார் அதே 'சேது' படத்தின் சாயலுடன்.

 

- வே. கிருஷ்ணவேணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்